இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
89
அருள்நெறி முழக்கம்
திருவெற்றியூர்க்கூட்டத்தில் ஏலம்விட்டு ரூ. 4000 தருதல். மதுரைமீனாட்சியம்மன் திருக்கோயிலில் திருமுறைத் தமிழ் அருச்சுனை தொடங்குதல். | |
1965 | இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரசு வழக்குத் தொடர்தல். |
1966 | தமிழ்நாடு தெய்வீகப் பேரவை தோற்றம் |
1967 | திருப்புத்தூர்த்தமிழ்ச்சங்கம் தோற்றம். |
திருக்கோயில் கருவறைக்குள் சீலமுடைய அனைவரும் சாதி வேறுபாடின்றி திருமுறைநெறிப்படி-போதொடு நீர் சுமந்தேத்தி வழிபாடு செய்வதெனத் திருப்புத்தூர்த் தமிழ்ச்சங்கம் தீர்மானம் நிறைவேற்றுதல். | |
1968 | இரண்டாம் உலகத்தமிழ்மாநாடு-"திருக்குறள் உரைக்கோவை" நிகழ்ச்சிதொடக்கவுரை நிகழ்த்தல்- |
திருக்குறள் இந்திய மாநாட்டின் தேசிய நூலாக வேண்டுமென்று இம்மாநாட்டில் வலியுறுத்தல். இலங்கைப் பயணம். இரண்டு வாரங்கள், இலங்கை யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருக்கோயில் நுழைவுக்காக உண்ணாநோன்பிருத்தல். கீழவெண்மணித் தீவைப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுதல். புத்தாடை வழங்குதல். | |
1969 | பாபநாசம் பொதிகையடி திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி ஏற்பு. |
கலைஞர் மு. கருணாநிதி பாரி விழாவிற்கு வருகை. கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் விருப்பத்தின் வழி தமிழ்நாடு சட்டமன்ற மேலவை பொறுப்பேற்றல். தமிழ்நாடு தெய்வீகப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெறல். | |
1970 | சட்டமன்றமேலவையில் இந்து அறநிலையத்திருத்த மசோதா- |
சாதி வேறுபாடின்றி அனைவரையும் அர்ச்சகராக நியமனம் செய்தல்பற்றிப் பேசுதல். | |
1971 | தமிழ்நாடு சமாதானக் குழுத் தலைவராதல். |