உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வ.வே.சு.ஐயர்


விடுவிக்கலாம் என்ற திட்டத்தைப் பற்றியே அவர்கள் சிந்தித்து செயல்படுத்துவார்கள். இந்த விடுதியிலே தங்கும் இந்தியர்கள் ஒன்றுகூடி அடிக்கடி கூட்டம் நடத்தி, இந்திய சுதந்திரம் பற்றி விவாதித்து முடிவு காண்பார்கள்.

இலண்டன் நகரிலே உள்ள ஸ்காட்லாண்ட் யார்டு என்ற இரகசியப் போலீஸ் நிறுவனம் உலகிலேயே மிகப் புகழ்பெற்ற போலீஸ் பிரிவாகும். அந்தப் பிரிவில் துப்பறியும் வல்லமை பெற்ற பெரும் நிபுணர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டிலும் சரி, அல்லது உலகின் மிகப் பெரும் மாநகர்களிலே ஒன்றான லண்டன் நகரிலும் சரி, எது எந்த மூலையிலே, எப்போது நடந்தாலும் சரி, அடுத்த பத்தாவது நிமிடத்திலேயே ஸ்காட்லாண்டு யார்டு போலீசுக்கு உடனே முழுவிவரமும் தெரிந்துவிடும். பிறகு அந்த விவரத்தை வைத்துக் கொண்டு மேலாலுள்ள நடவடிக்கைகளை அந்தப் போலீஸ் துறை கண்டு பிடித்து விடும். அவ்வளவு உலகப் புகழ் பெற்ற பாராட்டுதல்களைப் பெற்ற துறை ஸ்காட்லாண்டு யார்டு போலீஸ் துறை.

இந்நிலையில், இந்தியா விடுதியில் நடைபெறும் சம்பங்கள். எல்லாமே ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் துறைக்கு அவ்வப்போது தெரிந்து வந்தது. அதனால், அந்த ரகசியப் போலீஸ் துறை அந்த விடுதியில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளையும் எச்சரிக்கையுடன் கவனித்து வந்தது. நம்மை ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் துறை ரகசிய மாகக் கவனிக்கின்றது என்பதை இந்திய இளைஞர்களும் சந்தேகமின்றித் தெரிந்து கொண்டார்கள்.

இந்திய இளைஞர்கள் அனைவரும் பாரிஸ்டர் சட்டப் படிப்பு படிக்க வந்தவர்கள் தானே! அதனால், தாங்கள் செய்யும் எந்தவிதச் செயலையும் எவரும் கண்டுபிடிக்க முடியாதபடி தட்யங்களோ, அதற்கான ஆதார எழுத்து வடிவச் சான்றுகளோ ரகசியப் போலீசாரிடம் சிக்கிவிடாதபடி மிக எச்சரிக்கையுடன் விழிப்பாகச் செயல்பட்டு வந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/18&oldid=1080653" இலிருந்து மீள்விக்கப்பட்டது