பக்கம்:பறக்கும் மனிதன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பறந்தது. முதல் நாளன்றே இவ்வாறு பறக்க முயற்சி செய்யப்போவதைப்பற்றி அறிவித்திருந்தும் ஆறே பேர் தான் இந்த அதிசயத்தைப் பார்க்க வந்திருக்கிருர்கள். ஏனென்றால், எந்திரத்தின் உதவியால் பறக்க முடியுமென்று மக்கள் அன்று நம்பவில்லை.

    முதலில் ஆர்வில் ரைட் விமானத்தில் பறந்தார். விமானம் 12 செக்கண்டு பறந்து சுமார் 120 அடி துாரம் சென்றது. அன்றைக்கே மேலும் மூன்று முறை அந்த விமானம் பறந்தது. கடைசி முறை விமானம் பறந்தபோது வில்பர் ரைட் அதில் இருந்தார். அந்த முறை விமானம் 59 செக்கண்டு பறந்து சுமார் 852 அடி தூரம் சென்றது. எத்தனையோ தோல்விகளேயடைந்தும் மனம் தளராமல் முயற்சி செய்து இவர்கள் கடைசியில் வெற்றி பெற்றார்கள்.
   ரைட் சகோதரர்கள் பறந்த விமானம் அவர்களேப் பாராட்டும் அமெரிக்கத் தபால்தல்.
     இந்த இரண்டு சகோதரர்களுமே எந்திர சக்தியால் செல்லும் ஆகாயவிமானத்தில் முதன்முதலாகப் பறந்தவர்
                        23