பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

(ஆ) கோரைப்பற்கள் (Canine):

மேல் தாடையில் இரண்டும், கீழ்த்தாடையில் இரண்டும் என மொத்தம் 4 கோரைப் பற்கள் உண்டு. இவையும் ஒற்றை வேருடையதாகவே விளங்குகின்றன. உணவுப் பொருட் களைக் கடிக்க, கழிக்க, வெட்ட உதவுகின்றன.

(இ) முன்கடைவாய்ப் பற்கள் (Premolars):

மேல் தாடையில் நான்கும், கீழ்த்தாடையில் நான்கும்

என, மொத்தம் 8 பற்கள் உண்டு. இவைகளுக்கு 1 வேர்

அல்லது இரண்டு வேர்கள் உண்டு.

கடை வாய் முன் பற்களில் இரண்டு முகடுகள்

இருப்பதால், உணவுப் பொருட்களை நன்கு அரைத்திட உதவுகின்றன.

(ஈ) கடை வாய்ப் பற்கள் (Molars):

மேல் தாடையில் ஆறும், கீழ்த்தாடையில் ஆறும் என்று மொத்தம் 12 பற்கள் உண்டு. கடை வாய்ப் பற்களின் மேற்புறத்தில் நான்கு முதல் 5 முகடுகள் இருக்கின்றன. இதன் மேற் பாகம் தட்டையாக விரிந்திருப்பதால், உணவுப் பொருட்களை நன்கு அரைத்திட உதவுகின்றன.

கடை வாய்க் கீழ்பற்களுக்கு 2 வேர்களும், கடைவாய் மேல் பற்களுக்கு 3 வேர்களும் உள்ளன. கடைசியாச முளைக்கும் கடைவாய்ப் பல்லே அறிவுப்பல் எனப்படுகிறது.

Gl5T6oTsol – (Pharynx)

வாயில் உணவுகள் உடைக்கப்பட்டு நாக்கால் கலக்கப் பட்டு, உமிழ் நீரால் கூழாக்கப்படுகின்றன.

இவ்வாறு இதமாக்கப் பெற்ற உணவுகள், இரைப்பைச் குள் செல்வதற்கு உதவுகின்ற உறுப்புக்கள் நாக்குத் தசைகள்,