கடை திறப்பு 39 கொப்பூழாகிய நீர்ச்சுழியில் உரோமப் பகந்தண்டு முனேத்தெழுத் துள்ளது; அத்தண்டில் மாலேயில் காணப்பெறும் தாமரை மொட்டுக்கள் போன்று இரண்டு கொங்கைகள் தாங்கப்பெறு கின்றன என்று வருணிக்கும் அழகினைக் காண்மின், கொப்பூழை நீர்ச்சுழிக்கும் கொங்கைகளேத் தாமரை அரும்புகட்கும் உவமை கூறுவது வழிவழி வரும் கவி மரபு."நீர்ப்பெயல் சுழியின் நிறைந்த கொப்பூழ்” (பொருநரா. வரி 36) "ஆற்றில், சுழியொன்றி நின்ற தன்ன உந்தியாள்” (கம்பரா, பாலகாண்-உண்டாட்டு-15) என்ப வற்றில் உத்தி நீர்ச்சுழியுடன் உவமிக்கப்பெற்றிருத்தல் காண்க, அங்கனமே, குளனணி தாமரை பாசரும்பு ஏய்க்கும், இளமுலே பாராட்டிணுய்’ (கலி-22) என்றும், தாமரை, முற்ரு முகை நீர் எழுதி முலேயென்றீர்” (பாண்டிக் கோவை-86) என்றும் வருவதில் தாமரை அரும்பு கொங்கைகட்கு உவமையாக வத்துள்ளமை காணத்தக்கது. கொங்கைபற்றிய இன்ளுெரு நயமான காட்சியைக் காட்ட விரும்புகின்றேன். அழகிய நங்கையொருத்தி காலில் அணிந் துள்ள சிலம்புகள் ஒலிக்குமாறு ஒய்யார நடைபோட்டுக் கொண்டு நடந்து வருகின் ருள், அவளுடைய கொங்கைகளின் பாரத்தை அவளது நுண்ணிய துடியிடை தாங்க முடியாது போகும் என்று எண்ணி அபயம், அபயம் என்று அபயக் குரல் தந்து ஒலிக் கின்றனவாம் அச்சிலம்புகள். இதனைக் கவிஞர்,
- உபய தனம்.அசையில் ஒடியும் இடை நடையை
ஒழியும் ஒழியும்'என ஒண்சிலம்பு "அபயம் அபயம்'என அலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமிளுே. ' என்ற பாடல் பன்முறை படித்துச் சுவைக்கத் தக்கது. இயல்பாக எழும் சிலம்பு ஒலிக்குக் கவிஞர் தம் கற்பனைத் திறத்தால் புதுப் பொருள் கற்பித்துச் சிறப்பிக்கும் நயம் எண்ணி மகிழத்தக்கது. இப்பாடல் தாயுமான அடிகளின் கருத்தையும் கவர்ந்துவிட்டது. இதனே அடியொற்றி அப்படியே,
- மின்போலும் இடைஒடியும்
ஒடியுமென மொழிதல்போல் மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைத்துவிழு 28. தாழிசை,-58,