பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

261




உலகில் பிறந்த எல்லோருமே தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்கவேண்டும் (Recognition), தன்னைப் பெரிதாக நினைக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.இப்பண்பு, குழந்தைப் பருவத்திலிருந்தே கொப்பளித்துக் கொண்டு புறப்பட்டுவிடுகிறது.

இந்த எண்ணத்தின் மொத்த வடிவமாகத்தான், கூடி சேர்கிற ஆர்வம் நிறைந்து நிற்கிறது. இந்த நிறைவை எதிர்நோக்கித் தான் சங்கங்களும், சபைகளும், கழகங்களும், கட்டுக்கோப்பான அமைப்புகளும் உருவாயின.

இதே வேகத்தில் தான் அரசியல் கட்சிகள்,மதங்கள், மற்றும் சமூகச் சங்கங்கள் தோன்றின. தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவே, அங்கீரிக்கப்படாத மக்கள் பலர் சேர்ந்து, புதிய புதிய அமைப்புகளை உருவாக்கினர். அதிலும் முடியாதவர்கள், அழிவு வேலைகளுக்குத் தலைமை தாங்கினர். இப்படித்தான் பல பிரிவுகள் சமூக அமைப்புக்குள் சதிராட்டம் போட்டன. போடுகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளை சுமுகமாக்கும் பணியில் உடற்கல்வி தலை நிமிர்ந்து நிற்கிறது. அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கி, அவர்கள் அகமும் புறமும் மகிழும் வண்ணம் சந்தர்ப்பங்களைக் கொடுத்து, சக்தியை சரியாக செலவழிக்கச் செய்கிறது.அதுவே, நல்ல குடிமக்களை உருவாக்கும் நலமான பணியாக அமைந்து போகிறது.

சமூக அமைப்பும் சிறப்பும்

வேறு எந்த மிருகங்களுக்கும் இல்லாத சிறப்புத் தன்மை மனிதர்களுக்கு உண்டு.அதுதான் சேர்ந்து வாழும் செழுமையாகும்.