பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

உடற்கல்வி என்றால் என்ன?


 என்று போதித்திருக்கின்றார்கள்.அத்தகைய ஆலோசனை முறைகளையும் நாம் அறிவது நல்லது.

பயன்படுத்தலும் பயன்படுத்தாதிருத்தலும் (Use & Disuse)

உடல் என்பது அபூர்வமான, அதிசயம் நிறைந்த ஒர் ஒப்பற்ற எந்திரமாகும். அது பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும் ஓயாது உழைத்து, தானே வளர்ந்து, தானே நிறுத்தி, தேவையைப் பெற்றுக் கொண்டும், முடிந்தால் தானே தீர்த்துக் கொள்ளும் சக்தி வாய்ந்த, சகல சித்திகளும் நிறைந்த உன்னதமான உயிர் வாழும் எந்திரமாகும்.

என்றும் பழுதாகாமல் பத்திரமாக இந்த எந்திரத்தைக் காக்கும் தந்திரம் ஒன்று உண்டு. அந்தத் தாரக மந்திரத்தின் பெயர் தான் உழைப்பு என்பது.

நமது உடலாகிய வளரும் எந்திரத்தை, நல்ல முறையில் காத்துக் கொள்ள உழைப்பே உதவுகிறது. உழைக்கும் நேரத்தில் உடலில் உண்டாகும் தேய்வுகளை உடல் தானே புதுப்பித்துக் கொள்கிறது. பழைய திசுக்களை போக்கி, புதிய திசுக்களை உண்டாக்கியும் கொள்கிறது.

இவ்வாறு சக்தி வாய்ந்த ஒர் உயர்ந்த எந்திரத்தை, உழைப்புதான், உயிரோட்டமாகக் காத்து வளர்க்கிறது. உழைப்பு தான் உடலுக்கு வேண்டும்; உடலை நாம் உழைப்புடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால், எப்படி பயன்படுத்துவது என்ற வினாதான், நம் முன்னே வந்து முகம் காட்டி நிற்கும்.

பக்குவமாக பயன்படுத்துவது நாம் செய்யக் கூடிய வேலை.