பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

55


நிமிடம் அமிழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள். இருப்பது நமக்குத் தெரியும். இனிமேல் இருப்போமா என்பது யாருக்குத் தெரியும்?

அதற்குள், சிரித்து வாழ்வது, செழிப்புடன் வாழ்வது, துன்பத்தைத் தவிர்த்து வாழ்வது அறிவுடையோர்க்கு அழகல்லவா! சிதம்பரமாக வாழ்ந்தால் எப்படி? என்ற கேள்விக்கு நீங்களே விடை கண்டு பிடித்து விட்டால், வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது விளங்கும்.

‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று நம் வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஏற்றுக் கொண்ட பிறகு, நல்லதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, துன்ப நிகழ்ச்சி என்றால் அதிலிருந்து விடுபடும் வழியை நிதானத்துடன் எண்ணித் துணிந்து, செயல்படுகின்ற செம்மாந்த இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழிப்பதனாலேயே ஒருவர் பெரிய ஆளாக மாறிட முடியாது. தன்னைப் பற்றி உயர்த்திப் பேசுவதனாலேயே ஒருவர் அறிஞன் ஆகிவிட முடியாது. பிறரது செயலில் குற்றம் குறை கண்டுபிடிப்பதனாலேயே ஒருவர் சிறந்த செயல் வீரர் ஆகிவிட முடியாது.

எதையும் ஏற்றுக் கொள்கின்ற மனம், எதையும் நல்ல முறையில் பயன்படுத்தி, தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற தங்கக் குணம், உள்ளதைக் கொண்டு திருப்தியடையும் பண்பு, நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று நாளும் நினைக்கின்ற மனிதர்களே நிம்மதியாக வாழ்கின்றனர்.