பக்கம்:தேன் சிட்டு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிக்கோள்

69



துவக் கருத்தை எம்முறையிலேனும் எங்கும் பரப்ப வேண்டுவ்து மிக முக்கியம்.

வீரர்கள் போர்க்களத்திலே காட்டிய அசகாய சூரத்தனத்தையும், துணிவையும், அவர்கள் பெற்ற பெரு வெற்றிகளையும் பற்றிப் புகழ்ந்து பேசுவது இனிமேல் உகந்ததல்ல; சிறந்த பண்பாடுமல்ல. எந்த நாட்டு மக்களும் அந்நாட்டு வீரர்களைப் பற்றித் தனிப்பெருமை கொள்ள வேண்டியதில்லை. வீரம் என்பது அவர்களுக்கு மட்டும் வாய்த்த பண்பல்ல. நடுநிலைமையோடு அமைதியாக ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு நாட்டிலும் சிறந்த வீரர்கள் இருந்திருக் கிறார்கள் என்பது தெரிய வரும். உயிருக்கு அஞ்சாது போரிலே சிறப்பெய்தியவர்கள் எங்கும் உண்டு. அப்படிச் சிறப்பெய்த வேண்டும் என்பதே ஒரு வெறியாக மாறியதும் உண்டு. மக்கள் அத்தகைய வீரத்தைப் பாராட்டிப் பெருமைப்படுத்தியதே அதற்கு முக்கிய தூண்டுகோலாகவும் இருந்துள்ளது. அவர்களுடைய வீரத்தையே பெரிதாக இளைஞர்களின் முன்னே நிறுத்திக் காட்டினர். அந்த வீரம் அவர்களிடத்தேயும் மிகுந்து காணப்படல் வேண்டும் என்கிற குறிப்பும் அடிப்படையாக நின்றிருந்தது. நாடு என்ற எல்லைக்குள்ளே நின்று அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமே மிகுந்திருந்த காலத்தில் இது ஒரு வேளை தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம். இன்று அந்த எல்லையிலே நின்று மார்தட்டுவது காலத்திற்கேற்றதல்லாத பழங்கொள்கை யாக மாற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேன்_சிட்டு.pdf/70&oldid=1155060" இலிருந்து மீள்விக்கப்பட்டது