பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரவிந்தர் சிறை சென்றார்! ஆன்மீக அருளாளராக மீண்டார்:

மனிதனாக, புரட்சிவாதியாக, தீவிர தேச பக்தராக, அலிப்பூர் வெடிகுண்டு வழக்குக் குற்றவாளியாக, மகான் அரவிந்த கோஷ் 1908-ஆம் ஆண்டு, மே மாதம் ஐந்தாம் நாள் சிறை சென்றார்.

அந்தக் குற்றவாளி, கைதி, ! ஆன்மீகவாதியாக, மாண்புமிகு ஞானியாக, அரவிந்தரெனும் மகானாக 騷 1909 تفسـث-ஆம் ஆண்டு, மே மாதம் ஐந்தாம் நாள் சிறையிலே இருந்து வெளியே வந்தார்.

வெடிகுண்டு வழக்கில் குற்றவாளியாக, 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை, எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை” என்ற வெறி முழக்கத்தோடு சிறை சென்றார் அரவிந்தகோஷ். சரியாக ஓராண்டுக் காலமாகச் சிறையிலே தவங்கிடந்து, தன்னைத்தான்ே உருக்கிய ஞான வேள்வியின் அருளால், வேதாந்தியாக, மகானாக, அரவிந்தர் எனும் ஞானியாக சிறை மீண்டு புது மனிதராக வெளியே வந்தார்: