பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்!

இந்த மனிதர் இறந்து மறைந்து நீண்ட காலமான பின்னரும்கூட, அவருடைய சொற்கள், பாரத நாட்டில் மட்டுமன்று, கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளில் எல்லாம் எதிரொலிக்கும்.

எனவேதான்், இந்த மனிதர் வழக்கு மன்றத்தின் முன்னால் மட்டுமன்று, வரலாற்றின் உயர்நீதி மன்றத்தின் முன்னாலும் நிற்கிறார் என்று நான் மீண்டும் சொல்லுகிறேன்

'இங்கிலாந்து நாட்டின் பெருமை மிக்க வரலாற்றின் பெயரால் நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்றொரு நாள் ஓர் ஆங்கிலேயே நீதிபதி, நியாயம் வழங்கத் தவறி விட்டார் என்ற அவப்பெயர், எதிர்காலத்தின் தலைமுறையினர் கூறாதபடி நடந்து கொள்ள வேண்டுமென்று. நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார் சித்தரஞ்சன் தர்ஸ்.

குற்றம் சுமத்தப்பட்ட அரவிந்தரின் சார்பாக தாஸ் கூறிய ஆரம்பவாத முகவுரையைக் கேட்ட நீதிமன்றம் - மிகவும் பரபரப்புடன் காட்சியளித்தது.

நீதிபதிக்கு உதவியாக இரண்டு அஸ்ஸ்ெஸர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களுடைய கருத்துக்களை ஆதாரமாய்க் கொண்டுதான்் நீதிபதி தீர்ப்பளிப்பார். அந்த இரண்டு பேரும் இந்தியர்கள்.

குற்றவாளியின் சார்பாக சித்தரஞ்சன்தாஸ் வாதாடுவதை அந்த அஸ்ஸெஸர்கள் மிக உன்னிப்பாய் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி சித்தரஞ்சன் தாஸ் பேசுகிறார் :

"மாண்புமிகு அஸ்ஸ்ெஸர்களே! குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவர் போதித்த உயர்ந்த கருத்துக்களின் பெயராலும், நமது நாட்டின் பழம் பெரும் மரபுகளின் பெயராலும், நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன்".

'இவருடைய நாட்டைச் சேர்ந்த நீங்கள், உணர்ச்சி வசப்பட்டோ, நிர்பந்தத்தாலோ, நீதி வழங்கத் தவறியதாக,