உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதீயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi

பேராசிரியர் ரெட்டியார் ஒரு சிறந்த வைணவத் தமிழறிஞராக விளங்கு கின்றார்; வைணவத்தில் பல்வேறு ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். இவருடைய வைணவ ஈடுபாடு இவர் எழுதியுள்ள எல்லா துரல் களிலும் வெள்ளிடை மலையாகத் தோன்றும். இந்நூலிலும் பாரதி பாரின் விடுதலை வேட்கைக்கு உவமை கூறும்போது ‘நாயன் மார்கட்கும் ஆழ்வார்கட்கும் பக்தி அவர்தம் மூச்சாக இருந்தது போலவே, இவருக்கு விடுதலையே மூச்சாக இருந்தது’ (பக். 7) என்று நயம்பட உரைக்கின்றார்.

‘சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்கு

சேரும்ஐம் பூதத்து வியனுலகு அமைத்தாய் அத்தனை யுலகமும் வண்ணக் களஞ்சிய

மாகப் பலப்பலகல் அழகுகள் சமைத்தாய்’

என்ற பாரதியாரின் பாடற்பகுதி விசிட்டாத்வைத தத்துவத்தை உள்ளடக்கி இருப்பதைப் பேராசிரியர் சுவைபட விளக்குகின்றார் (பக். 67).

இறைவனை அடைதற்கு'வைணவ தத்துவத்தில் முடிந்த முடியாக, எளிய வழியாக, மேற்கொள்ளப்பெறுவது பிரபத்தி நெறி (சரணாகதி மார்க்கம்). எனினும், சற்றுக் கடினமாகவுள்ள பக்தி நெறியும் அங்கு மேற்கொள்ளப்பெறுகின்றது என்று கூறி அவற்றைப் பாரதியார் கைக்கொண்டதாக எடுத்துக்காட்டுகின்றார் (பக் 57). பேராசிரியர் ரெட்டியாரின் ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் பன்னூல் ஆராய்ச்சியும், பழுத்த அநுபவமும் பாரதியார் பாடல்களைப் பாங்குடன் விளக்கப் பல இடங்களில் பயன்படுகின்றன :

  • தன்னைக் கட்டுதல்’ என்பது மனத்தைக் கட்டுதல், ஐம்பொறிகளை அடக்கி மனத்தைக் கட்டுதல் என்று ஞானியர் கூறும் பொருளில் அல்ல ஈண்டுக் குறிப்பிடப்பெறுவது. “பாதரசமாய்ச் சஞ்சலப்பட்டுக்கொண்டே’ { தாயுமானவர்) இருக்கும் மனத்தை, பல பொருள்களின்மீது சஞ்சலப்படுகின்ற மனத்தை அடக்கினால் போதும் என்பது பாரதியாரின் கருத்து’

(பக். 33). பாரதியாரின் கவிதைகளை விளக்கும்போது காலத்திற்கேற்ற கருத்துகளையும், குறிப்பாக அ றி வி ய ற்கருத்துகளையும்

ஆங்காங்குப் (பக். 52-55; 191-92) பேராசிரியர் ரெட்டியார் விளக்கிச் செல்வது படிப்போரின் சுவையை மிகுவிக்கும் என்பதற்கு ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/7&oldid=681300" இலிருந்து மீள்விக்கப்பட்டது