உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதீயம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதீயம்

என்று விநாயகரை வேண்டுதலால் அறியலாம். நமது காட்டின் தற்கால வாழ்க்கையைச் சார்ந்தவற்றை நெஞ்சு பொறுக்கு திலையே’, ‘கெஞ்சிலுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்ற பாடல்களில் பட்டவர்த்தனமாகக் காட்டுவார். சமுதாய வாழ்வின் குறைகளை இங்குத் தெளிவாகக் காணலாம். தேசிய கீதங்கள் கூடத் தற்காலச் சமுதாய வாழ்வினையே எடுத்துக்காட்டுவனவாக அமைந்துள்ளன. சமுதாய வாழ்வின் குறைகளை நீக்கும் மு ைற.க ைள ப் புதுமைப் .ெ ப ன்’, ‘பெண்மை என்ற பாடல்களில் கண்டு மகிழலாம். தற்கால வாழ்வின்மீதுள்ள மோகத்தாலும், விடுதலை வேட்கையாலும் பாரதி நம் நாட்டின் பழமையை வெறுக்கவில்லை . அதன் கலைகளைத் த ட் டி க் கழிக்கவில்லை தத்துவங்களை உதறித் தள்ளவில்லை. இவர் இறையுணர்வு மிக்கவர் : கீதை உணர்த்தும் அறத்தைக் கைக் கொண்டவர். சக்தி வணக்கத்தில் - வழிபாட்டில் - மனத்தைப் பறி கொடுத்தவர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கவிதை பொழியும்போது தமிழ்ப் பண்பை நினைவில் கிறுத்திக் கவிதையில் பாய்ச்சியவர்.

கம் நாடு வேளாண்மையை நம்பியிருக்கும் நாடு. இந்த நாடு செல்வங்கொழித்து முன்னேற வேண்டுமானால் நாட்டில் மக்கள் தொழில்வளத்தைப் பெருக்க வேண்டும்; உற்பத்திப் பெருக வேண்டும், பிற நாட்டு வாணிகத்தை மேற்கொள்ள வேண்டும்.நாடு சுதந்தரம் பெற்ற பிறகு இவை ஒரளவு நிறைவேறிக்கொண்டு வரு வதை நாம் காணலாம். பாரத தேசம்’ என்ற தலைப்பில் காணப் பெறும் பாடலில் இக்கருத்துகள் நன்கு பொதிந்திருப்பதைக் கண்டு களிக்கலாம்.

காசி நகர்ப்புலவர் பேசும் உரை தான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம் ராசபுத் தானத்து வீரர் தமக் கு

கல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் ஆயுதம்செய்வோம் நல்ல காகிதம்செய் வோம்.

ஆலைகள் வைப் போம்கல்விச் சாலைகள்வைப் போம்.

  குடைகள் செய்வோம்.உழு படைகள்செய் வோம்

கோணிகள்.செப் வோம்.இரும் பாணிகள் செய்வோம் தடையும் பறப்புமுனர் வண்டிகள்செய்வோம்

ஞாலம் கடுங்கவரும் கப்பல்கள்.செப் வோம்

போன்ற பாடற்பகுதிகளில் கைத்தொழில் வளத்தைப்பற்றிக் குறிப்பிடுவதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/42&oldid=681270" இலிருந்து மீள்விக்கப்பட்டது