பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

4.

7.

22

ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்

குண்மை தெரிந்தது சொல்வேன்;

சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு

தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

வேத மறிந்தவன் பார்ப்பான்-பல

வித்தை தெரிந்தவன் பார்ப்பான்; நீதி நிலைதவ ருமல்-தண்ட

நேமங்கள் செய்பவன் நாய்க்கன். பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி: தொண்டரென் ருேர்வகுப் பில்லை,-தொழில்

சோம்பலைப் போல்இழி வில்லை. நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த

நான்கினில் ஒன்று குறைந்தால், வேலை தவறிச் சிதைந்தே-செத்து

வீழ்ந்திடும் மானிடச் சாதி. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்

ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே-மனை

வாழ்ந்திடச் செய்பவள் அன்னை:

ஏவல்கள் செய்பவர் மக்கள்:-இவர்

யாவரும் ஒர்குலம் அன்றாே? மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல வீடு நடத்துதல் கண்டோம்.

சாதிப் பிரிவுகள் சொல்லி-அதில்

தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்,

நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு

நித்தமும் சண்டைகள் செய்வார்.