பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

நமது மாகாண முழுமையிலும் ஆசாரத் திருத்த விஷயத்தில் சிரத்தை யுடையோர் எல்லோரும் இந்த மாதம் திருநெல்வேலிக் கூட்டத்துக்கு அவசியம் வந்து சேர முயற்சி செய்யவேண்டும். இந்தக் கூட்டத்தை யொட்டி, மாதர்களின் சபையொன்று நடக்கப்போகிற தாகையால், கல்வி கற்ற மாதர்களெல்லோரும் அவசியம் வந்திருந்து, தமக்கு வேண்டிய சீர்திருத்தங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். “தாயும் பிள்ளையுமானலும் வாயும் வயிறும் வேறு. அவரவருக்கு வேண்டிய விஷயங்களைக் குறித்து அவரவர் பாடு பட்டாலொழியக் காரியம் நடக்காது. மேலும், நம் நாட்டு ஆண்மக்கள் தமது நிலைமையை உயர்த்திக் கொள்ளக்கூடிய சுலபமான உபாயங்களைக்கூடக் கையாளத் திறமை யற்றாேராகக் காணப்படுகிரு.ர்களாதலால், நம்முடைய ஸ்த்ரீகளை மேன்மைப் படுத்துதற்குரிய காரியங்களே முற்றிலும் இந்த ஆண்மக்கள் வசத்திலே விட்டுவிடாமல், மாதர்கள் தாமே முற்பட்டுத் தமக்கு வேண்டிய சீர்த்திருத்தங்களைத் தேடிக் கொள்வதே நன்றாகும். அன்னிய தேசங்களில் விடுதலைக் காக உழைக்கும் ஸ்திரீகள் பெரும்பாலும் ஆண்மக்களின் உதவியை அதிகமாக நாடாமல் தமது மேம்பாட்டுக்குரிய வேலைகளைத் தாங்களே செய்து வருவதை நம் தேசத்து ஸ்திரீகள் நன்கு கவனிக்கவேண்டும்.

தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் வரை ஆசாரத் திருத்தத் தலைவர்கள் பெரும் பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், ஆர்ய நாகரீகத்தில் அனுதாபம், இம்மூன்றும் இல்லாதவர்களாக இருந்து வந்த படியால், பொதுஜனங்கள் இவர்களுடைய வார்த்தையைக் கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனிலும், அவர் களுடைய கொள்கைகளிற் பல மிகவும் உத்தமமான கொள்கைகள் என்பதில் ஐயமில்லை.