பக்கம்:பாரதியும் சமூகமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

போக வேண்டும். ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கு, யாத்திரை செய்யப் போதுமான திரவியமில்லாதவர்கள் ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதி பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திரு

கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிரு

கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றா லொழிய, இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை ஆதலால், தமிழ்ப் பிள்ளைகளே, வெளி நாடுகளுக்குப்போ உங்களுடைய அறிவுச் சிறப்பிலுைம், மன வுறுதியினலும் பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும், செல்வ

துடனும், வீர்யத்துடனும், ஒளியுடனும் திரும்பிவாருங்கள் உங்களுக்கு மஹாசக்தி துணை செய்க.

32. மாலை

15 செப்டம்பர் 1916 (குறிப்பு: ஒரு காலத்திலே பல துறைகளில் நாம் சிறந்திருக்கலாம். அதையே எண்ணிக்கொண்டு இன்று அத்துறைகளில் மேலோங்காது நிற்பது பெருந் தவறு. பழைய சிறப்புக்கள் நம்மால் இன்றும் முடியும் என்பதைக் காட்டுவதற்குச் சான்றாக இருக்கலாமே ஒழிய, அதையே எண்ணி மகிழ்ந்து திருப்தியடைவது பிழை. எந்த சாஸ் திரமும் ஓரிடத்தில் வந்து நின்று விடுவதில்லை. என்று நிற்கிருேமோ அன்றே வீழ்ச்சி தொடங்கு கிறது. ஆகவே கலைக்கு முடிவில்லை. இது விஞ்ஞானத்திற்கும் பொருந்தும்; அழகுக் கலைகள் முதலியவற்றுக்கும் பொருந்தும். மொழி வளர்ச்சிக்கும் பொருந்தும்.