பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு தடைகள்

37


ஒலி வேகத்தினும் மிகுதியான வேகத்திலோ அல்லது அதனினும் குறைவான வேகத்திலோதான் பறக்க வேண்டும். ஒலிக்குக் குறைவான வேகத்திலிருந்து ஒலிக்கு மிகுதியான வேகத்தை ஒரு விமானம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டால், அது மிக விரைவில் அந்த வேகத்திற்கு மாறிவிடுவது சிறப்பாகும். இதற்கு மேலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒலியின் வேகமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடல் மட்டத்திற்கு எட்டு மைல் உயரத்தில் அதன் வேகம் மணிக்கு 860 மைல் இருக்கும். ஒலியின் வேகம் காற்றின் வெப்ப நிலையையும் பொறுத்துள்ளது. குளிர்ந்த காற்றில் ஒலியின் வேகம் குறைவு. இன்னும் மேலே காற்று மேலும் அதிகக் குளிர்ச்சியாகவும் இலேசாகவும் உள்ளது. காற்றின் அடர்த்தியால் யாதொரு சங்கடமும் இல்லை; அதனுடைய வெப்பநிலைமட்டிலுமே பாதிப்பினை விளைவிக்கின்றது.

படம் 16 : டூக்லாஸ் ஆகாய இராக்கெட்டு

இன்று அறிவியலறிஞர்கள் புதிய புதிய வகை விமான வடிவங்களை அமைத்து இத்தடையை ஓரளவு சமாளித்துள்