பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதளிக்கும் அம்புலி

5

"மஞ்சில் மறையாதே மாமதி!
மகிழ்ந்து ஓடி வா“[1]

என்று வேண்டுகின்றாள். “அந்தத் திரைக்குள்ளே மறைத்து ஓடாதே, அப்படி எல்லாம் 'பிகு' பண்ண வேண்டாம், ஓடிவா“ என்றெல்லாம் மறைந்து கொண்டிருக்கும் 'அம்புலி மாமா' வோடு பேசுவது போல் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் போதே மேகத்திலிருந்து மறுபடியும் வெளிப் படுகின்றது முழுமதி ; இப்போது அது முன்னிலும் அழகாய்த் தோன்றுகின்றது. அந்தச் சந்திர வட்டத்தையும் தன் கண்மணி போன்ற கண்ணனின் முகச் சந்திரனையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றாள் யசோதை. கண்ணன் கை நீட்டிய வண்ணம் 'ஆம்புலி மாமா'வைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றான்.

“கைத்தலம் நோவாமே
அம்புலி! கடி{து)ஓடிவா!“[2]

என்று பரிந்து தாயும் சிபாரிசு செய்கின்றாள். இங்ஙனம் தாய் சொல்லக் குழந்தை ஒக்கலில் இருந்த வண்ணம் அம்புலியை விரலால் சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக் கின்றான். இங்ஙனம் பெரியாழ்வார் காட்டும் காட்சிகள் பல.

மேற்கூறியவாறு கவிஞர்கள் சந்திரனின் அழகில் ஒரு வகையில் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருக்க மற்றெரு வகையில் அறிவியலறிஞர்கள் தொலை நோக்கிகனாலும் (Telescopes) பிற வகையாலும் அதனை ஆராய்ந்த வண்ணம் இருந்து வருகின்றனர். இந்த விதமாகத்தான் இன்றுள்ள வான நூல் {Astronomy) வளர்ந்தது. சந்திரனுடைய அமைப்பு, அங்குள்ள தீர்வளம், நிலவளம், உயிர்வாழ் பிராணிகள் முதலியவை பற்றி ஓரளவு அறிந்து கூறியுள்ளனர் வான நூற் புலவர்கள்


  1. பெரியாழ்வார் திருமொழி 1, 4:2.
  2. பெரியாழ்வார் திருமொழி, 1. 4: 5.