பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் அதிகாரியின் இஷ்டத்தில்ை அது பாதிக்கப்படுவதில்லை. அன்றியும் தனக்கு உட்பட்ட பிரதேசத்தின்மேல் அதன் . . . அதிகாரம் ஓங்கி கிற்கின்றது. இந்தப் சர்வாதிகாரக் பேரதிகாரம் பிரிக்க முடியாத வகையில் கொள்கை '. ‘. - - - - ஒன்றுபட்டுளது. அதன் பிரதேசத்திலிருக் கும் எல்லாப் பிரஜைகளுக்கும், எல்லாச் சங்கங்களுக்கும் அது கட்டளே யிடுகின்றது. ஆல்ை அவற்றுள் யாதொன்றும் அதற்குக் கட்டளையிட் முடியாது. அதன் இஷ்டத்திற்குச் சட்டப்படி யாதொரு தடையும் ஏற்படுவதில்லை. ஆதலின் அரசின் சர்வாதிகாரம் வரம்பற்றதும், மாற்றக்கூடாததுமாகு மென்று புலப்படும். ‘. . . . . - - சர்வாதிகாரம் இருவகைப்படுமென்று சிலர் கூறுவர். அவை முறையே சட்டபூர்வமான சர்வாதிகாரம் என்றும் ராஜீய சர்வாதிகாரம் என்றும் சொல்லப்படும். நீதி மன்றங் . . . களால் சட்டமென்று ஏற்கப்பெற்று, கிர் வாக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பெறும் . . . . தகுதிவாய்ந்த கட்டளைகளே இடக்கூடிய அதிகார ஸ்தாபனம் சட்ட பூர்வமான சர்வாதிகாரம் படைத்த தாகும். சட்டப்படி அது சர்வ வல்லமை வாய்ந்தது. மற் ருெரு சர்வாதிகாரமாகிய ராஜீய சர்வாதிகாரம் அல்லது அரசியல் சர்வாதிகாரமென்பது ஒரு தேசத்துப் பெர்து மக்களிடத்திலோ, வாக்குரிமை பெற்ற தொகுதியினரிடத் திலோ மறைவாக வியாபித்திருக்கிறது. இவர்கள் அரசியல் விஷயங்களில் தங்கள் விருப்பத்திற்கேற்க கடக்கும் வண் ணம் சட்டப்படி ஏற்பட்ட சர்வாதிகாரிக்குக் கட்டளையிட லாம். ஆகையால் இதைச் சிலர் ஜனசம்மதம் பெற்ற சர்வாதிகாரம்' என்றும் கூறுவதுண்டு. பிரிட்டனில் பார்லிமெண்டுதான் எல்லாவற்றிற்கும் மேல் கின்று சட்டம் இயற்றும் ஸ்தாபனம். ஆனல் பொதுத் தேர்தல் ஒன்றில் வாக்காளர்கள் பெரும்பான்மை அங்கத் தினர்களேத் தேர்ந்தெடுத்துச் சட்ட சபைக்கு அனுப்பி அவர்கள் மூலமாக முன் இருந்த பார்லிமெண்டின் சட்டங் களே மாற்றி அமைக்கும்படி செய்யலாம. தங்கள் விருப் சர்வாதிகார ଶuଶ୪}ଅs 30