உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திசை மாரா

3

 பேரழகிலே ஈடுபட்டு அங்குள்ள் தண்மையிலே ஊறி நின்றேன். உடம்பும் கண்ணும் களித்தன. ஆனல் அவர் தம்முடைய தோட்டத்தின் பெயருக்குப் பொருள் விளக்கிய போது எனக்குத் தனியே ஓர் இன்பம் உண்டாயிற்று.

தாங்கள் கதிர் காம யாத்திரையை அன்று ஆரம்பித்தோம். கதிர் காம வேலவன் ஞாபகம் மனத்தில் இருந்தது. அந்த நாளும் முருகனுக்குரிய கிருத்திகை. இப்போது நாங்கள் தங்கிய இடமும் முருகனை நினைப்பூட்டும் இடமாக அல்லவோ இருக்கிறது? மயில் வாகனப் பெருமாளை நினைப்பூட்டியது அந்த மயிற்குன்றம். 'முனராகந்த' என்ற சிங்களப் பெயரைக் கேட்டபோது அந்த உணர்ச்சி இல்லை; அதன் பொருளைக் கேட்டபோதுதான் 'செஞ் சிறிய கால் விசாலத் தோகை துங்க அநுகூல பார்வைத் தீரச் செம்பொன் மயில்' ஞாபகம் வேரூன்றியது. மயில் வாகனப்பெருமான் தலத்தைத் தரிசிப்பதற்கு முன்பு மயில் வாகனத்துக்குரிய இடத்தைத் தரிசிப்பது எவ்வளவு பொருத்தமான காரியம் !

காலேயில் எழுந்தோம். மயிற்குன்றத்தை விட்டுப் புறப்பட்டோம். சில மணி நேரம் மலைப்பகுதிகளைத் தாண்டிச் சென்று சமவெளியில் கார் செல்லத் தொடங்கியது. ஆனால் எங்கும் அடர்ந்த காடு. அந்தக் காட்டினூடே மிக அழகான சாலை, அதன் வழியே நாங்கள் சென்றோம். திசைமாரா என்ற இடத்துக்கு வந்தபோது, "கதிர் காமத்தை அணுகிவிட்டோம்" என்று அன்பர் சொன்னார். "இன்னும் பதினொரு மைல் தாரம் இருக்கிறது" என்று அவர் பின்னும் விளக்கினார். கிட்டத்தட்ட இருநூறு மைல் வந்த எங்களுக்குப் பதினொரு மைல் கூப்பிடு துரந்தானே?

தமிழ் நாட்டில் கதிர்காமத்தைப் பற்றி எத்தனையோ விதமான செய்திகளைக் கேட்கிறோம். "மலையின் மேலும் காட்டினுாடும் இருநூறு மைலுக்கு மேலே பிரயாணம் செய்யவேண்டும். அத்தனை தூரமும் நடந்தே போக