பக்கம்:ஆய்வுப் பேழை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருநெல்வாயில் அரத்துறை

நடு நாட்டிலுள்ள பாடல் பெற்ற தலங்கள் 22; அவற்றுள் முதலாவதாக வைத்து எண்ணப் பெறுவது திருநெல்வாயி லரத்துறை என்னும் தலமாகும். இது வித்தகப்பாடல் முத் திறத்து அடியராகிய சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகிய மூவ ராலும் பாடப் பெற்ற சிறப்புடையது. இது பெண்ணு கடம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது; நிவா’ எனப் பெறும் வடவெள்ளாற்றின் கரையில் உள்ளது. சம்பந்தர்,

'கந்த மாமலருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை’’ என்றும், சுந்தரர்,

கல்வாயகிலும் கதிர்மா மணியுந்

கலந்துந் திவரும் நிவவின் கரைமேல் நெல்வாயிலரத்துறை" என்றும் பாடுவர்.

சம்பந்தர் பெற்ற பேறு

திருப்பெண்ணுகடத்திலிருந்து திருவரத்துறைக்குப் புறப் பட்ட சம்பந்தர், தம் தந்தையார் தோளின்மேல் எழுத் தருளிச் செல்வதை விடுத்து, நடந்து செல்லலாஞர். மாறன் பாடி என்னும் தலத்தை அடைந்த பொழுது, தம்மைச் சூழவந்தவர்கள் களைப்படைந்தனர். ஆகவே சம்பந்தர் மாறன் பாடியில் இரவில் தங்கியருளிஞர். திருவரத்துறையில் கோயில் கொண்டருளிய எம்பெருமான், சம்பந்தர் வழி நடந்து வந்த வருத்தத்தைப் போக்கத் திருவுளங் கொண்டார்; சம்பந்தர் ஊர்ந்து செல்ல முத்துச்சிவிகையும், பிடித்துக் கொள்ள முத்துக்குடையும், மு ன் னே ஊதிக்கொண்டு போதற்கு முத்துச் சின்னங்களும் அளிக்க விரும்பியருளினர்; அரத்துறையிலுள்ள அந்தணர்களுக் கெல்லாம் தனித் தனியே கனவில் தோன்றிச், "சம்பந்தன் அரத்துறைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுப்_பேழை.pdf/115&oldid=676650" இலிருந்து மீள்விக்கப்பட்டது