இலங்கையில் இறங்கினேன்
21
கியது. 1-45-க்கு யாழ்ப்பாண விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கே சுங்கச் சோதனையும் ஆரோக்கிய சோதனையும் நடந்தன. அம்மை அத்தாட்சி, காலரா அத்தாட்சி கொண்டுவராவிட்டால் இங்கிருந்து மீட்டும் அனுப்பி விடுவார்களாம். அரை மணி நேரம் யாழ்ப்பாண விமான நிலையத்தில் இருக்க வேண்டியிருந்தது. சரியாக 2-15க்கு வேறு விமானத்தில் எங்களை ஏற்றிக்கொண்டார்கள். அங்கிருந்து பிற்பகல் 3-10-க்குக் கொழும்பு வந்து சேர்ந்தேன்.
இலங்கையின் தலைநகரம் கொழும்பு. ஏறக்குறைய ஐந்து லட்சம் ஜனத்தொகை உள்ள நகரம். நகரத்திலிருந்து தெற்கே எட்டு மைல் தூரத்தில் ரத்மலானா என்ற இடத்தில் விமான நிலையம் இருக்கிறது. விமான நிலையத்துக்கு அன்பர்கள் வந்திருந்தார்கள். மாலையிட்டு வரவேற்றார்கள். ஸ்ரீ கணேஷும், வீரகேசரி ஆசிரியர் ஸ்ரீ ஹரன் அவர்களும், இலங்கை ரேடியோவிலுள்ள ஸ்ரீ சிவபாத சுந்தரம்[1] . அவர்களும், வேறு சிலரும் வந்து வரவேற்றார்கள். எனக்கு முன்பே தெரிந்தவர்களும் புதிய அன்பர்களும் முகமலர்ந்து தங்கள் அன்பை வெளியிட்டார்கள். என்னைச் சுற்றிலும் தமிழர்கள். என்னை அவர்கள் அன்புடன் தமிழிலே சௌக்கியம் விசாரித்தார்கள். தமிழ் நாட்டிலே உள்ள ஓர் ஊருக்குப் போனதாகத் தோன்றியதே ஒழிய அயல் நாட்டுக்கு வந்ததாகவே தெரியவில்லை.
அப்போது ஓர் அன்பர் வந்தார். வீரகேசரிப் பத்திரிகையின் நிருபர் அவர். “ஏதாவது ச்சொல்
- ↑ இப்போது கொழும்பு லிவர் பிரதர்ஸில் இருக்கிறார்