பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அங்கம் காட்சி ஒன்று (பானுமதியின் வீட்டில் ஒர் அறை பானுமதி ஏதோ படித்துக்கொண்டிருக்கிருள். லலிதா நுழைகிருள். மாலே நேரம்.) லலிதா : பானுமதி, இருக்கிருயா ? எங்காவது போயிருப் பாயோ என்று சந்தேகத்தோடேயே வந்தேன். பானுமதி : லலிதா, நேற்று சாயங்காலம் எங்கே வெகு நேரம்வரையிலும் காணவே இல்லையே ? லலிதா : நேற்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாயா ? பானுமதி : ஆமாம், இரவு ஒன்பது மணி வரையிலும் அ ங் கு தா ன் காத்திருந்தேன். உன்னைத்தான் காணுேம். லலிதா : அண்ணு இருந்தாரா ? பானுமதி : ஆமாம். நீ கலாரசனை சங்கத்திலே பிரசங்கம் செய்யவோ பாட்டுப் பாடவோ போயிருப்பதாகச் சொன்னர். லலிதா அவரே சொல்லியிருக்கும்போது மறுபடியும் எதற்கு இப்போ என்னேக் கேட்கிருய் ? பானுமதி : சங்கத்திற்குப் போயிருந்தாலும் அவ்வளவு நேரமாகியிருக்காதே என்றுதான் கேட்டேன். லலிதா நிலா வெளிச்சம் அற்புதமாக இருந்தது. அப்படியே சமுத்திரக் கரைக்குப் போளுேம். நில வொளியிலே பிரகாசிக்கும் கடலின் அழகைத்