பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தல ஸ்தாபன ஆட்சி இல்லை. சொத்துள்ளவர்களுக்கும் வரி கொடுப்பவர்களுக் கும் ஒரு குறித்த தொகைக்குமேல் வருமானம் உள்ளவர் களுக்கும் மாத்திரமே முனிசிபல் வாக்குரிமையுண்டு. சமீ பத்தில்தான் எழுத்தறிவு பெற்றவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. - இந்திய நாட்டில் கிராம சுய ஆட்சி ஸ்தாபனங்கள் மொத்தத்தில் அவ்வளவு ஊக்கம் உள்ளவையாகவும் உப யோகமானவையாகவும். இப்போது இல்லை. முன்காலத்தில் இத்தேசத்தில் ஸ்தல நிர்வாகத்தை நடத்திவந்த சுய ஆட்சி ஸ்தாபனங்கள் மிகத் தேர்ச்சிபெற்ற முறையில் ஏற்பட் டிருந்தன. முன்பு நமது தேசத்தின் தனிச் சிறப்புடைய அரசாங்க ஏற்பாட்டின்படி நிர்வாக ஆட்சிக்குக் கிராமங்) தான் அடிப்படையாயிருந்தது. புராதன கிராம சமுதாயங் களின் ஆட்சிமுறையைப் பிரசித்திபெற்ற பல அரசியல் கிர் வாக நிபுணர்கள் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர். ஆனல் அந்த் முறை rணமடைந்து சீர்குலைந்து போய்விட்டது; ஆங்கி லேயர் ஏற்படுத்திய அரசாங்க முறையினல் அழிந்துவிட்டது. இப்போது நமது தேசத்தில் பழைய காலத்தில் இருந்த கிராம சமுதாய ஏற்பாடுகள் முற்றும் மறைந்தே போயின. இந்தியாவில் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஸ்தல ஸ்தாபன ஆட்சித் திட்டம் ஆங்கில முறையை அனுசரித்தது. 1793-ஆம் வருஷத்துப் பிரகடனச் சட்டந்தான் முதல் முத லாக இக்காட்டில் ஸ்தல ஸ்தாபனங்கள் ஏற்படச் சட்ட பூர்வமான வசதியை அளித்தது. இப்போது நடைமுறை யில் இருக்கும் திட்டம் 1870-ஆம் வருஷத்தில் மேயோ பிரபு ...செய்த தீர்மானத்திலிருந்தும், 1888-ஆம் வருஷம் ரிப்பன் பிரபு செய்த் தீர்மானத்திலிருந்தும் வளர்ந்து வந்திருக்கிறது. 1918-ஆம் வருஷம் வெளிவந்த மாண்டேகு - செம்ஸ்போர்டு திட்டமும் இவ்விஷயத்தில் முன்னேற்ற ஏற்பாடுகளைச் சிபாரிசு செய்தது. கூடியவரையில் பிரஜைகளே ஸ்தல ஸ்ேதாபனங்களின் நிர்வாகத்தை வகிக்கவேண்டு மென்றும் மேலதிகாரிகளின் கண்காணிப்புக் குறையவேண்டு மென்றும் 107.