பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்குத் தொடுக்கலாம். அத்தகைய சந்தர்ப் கில் ஒரு குறித்த உத்தியோகஸ்தன்மீது நடவடிக்கை டுக்கவேண்டுமே யொழிய அரசர்மேல் வழக்குத் தொடரக் கூடாது. நஷ்ட ஈட்டையும் அந்த உத்தியோகஸ்தனிட் மிருந்தே பெறவேண்டும். சில சந்தர்ப்பங்களில், சட்ட சபையின் ஒட்டுமூலம், அரசாங்கமே ஓர் உத்தியோகஸ்தன் திறத்தில் விதித்த கஷ்ட ஈட்டைக் கொடுத்துவிடக்கூடும். இது திருப்திகரமான முறையன்று. ஏனெனில் கிர்வாக நடவடிக்கையில் ஏற்படும் தவறுகளுக்குப் பொறுப்பாளி யாகும் உத்தியோகஸ்தன் தன்னக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது சட்டத்தின் மூல முடுக்குகளைத் தேடிப் பார்த்து ஆதாரம் கண்டுபிடிக்க முயலுவான். தைரியமாகத் தனக்கு நேரென்று தோன்றும் வழியில் உத்தியோகத்தை நடத்தி வராமல், எப்போதும் தப்பித்துக்கொள்ளும் வழியைத் தேடியே அவன் தன் கடமைகளே நிறைவேற்றி வருவான். சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் பிழைகளுக்குச் சர்க்கா ரைப் பொறுப்பாளியாக்குவதுதான் சரியான முறையென் பதையும், நிர்வாக இலாகா சம்பந்தமான வழக்குகளைத் தனி மன்றங்களில் விசாரணை செய்வதே தக்கதென்பதையும் இக் கால அரசியல் அறிஞர்கள் அதிகமாக ஆதரிக்கின்றனர். அத்தியாயம் 13 பொது நிர்வாக வேலையும் விவில் ஸர்விஸும் இக்காலத்து அரசில் பொது நிர்வாகம் என்பது ஒரு முக்கிய மான விஷயமாகிறது. அரசாங்க அமைப்பிலே அந்த இலாகா ஒரு தனிப்பகுதியாகி விட்டது. அரசாங்கத்தின் '," வளர்ந்து வரவே, அதற்கு ஏற்றவாறு கிர் T வாக உத்தியோகஸ்தர்களின் தொகையும், அவர்களின் வேலைகளும் விரிவடைந்து நிற்பதே இதற்குக் 96.