உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிகாரிகள் அத்தனை பேரும் பன்றியின் ரக்கத்தின்மீது சிழ்க்கண்டவாறு உறுதி கூறுவார்கள். "நாங்கள் ஒலிம்பிக் போட்டி நிகழ்ச்சிகள் அனைத்தையும் நியாயமான வழியிலே, பாரபட்சமற்ற முறையிலே நடத்துவோம்," சொல்லோடு மட்டும் அல்லாது செயலளவிலும் அவர்கள் சிறப்பாகச் செய்து காட்டினார்கள்.

அவ்வாறு உறுதி எடுக்கும் அதிகாரிகள் அனைவரும் , எல்லிஸ் நகரத்தில் வாழ்கின்ற மதிப்பும் சிறப்பும் மிக்கப் பெருந்தகையாளர்கள் ஆவார்கள் அவர்கள் உரியவர்களால் பத்து மாதங்களுக்கு முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கென்று ஒதுக்கியுள்ள தனிச்சிறப்புமிக்க வீடு. களில் தங்கி. நடுவராகப் பணியாற்றும் பொறுப்பினைக் கற்றுக் கொள்வார்கள். அதற்குப் பிறகு அவர்கள் எடுக்கின்ற முடிவே இறுதியானதாக இருக்கும். அதை யாரும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியாது. நடுவர்கள் தவறிழைத்தால், அவர்களைத் தண்டிக்கும் உரிமை நாடாளு. மன்றத்திற்குத்தான் உண்டு முதன் முதலில் ஒருவரே நடுவராகப் பணியாற்றினர். பிறகு 10 பேர்கள் வரை நடுவராகப் பணியாற்றும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில், வயதிலும் அனுபவத்திலும் மூத்தவரான ஒருவரே, நடுவர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கூறியவாறு, உறுதியும் சபதமும் எடுத்த பிறகு, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்ப காலத்தில் ஒரே நாள் மட்டும்தான் நடைபெற்றன. பிறகு, விளையாட்டுக்களிலே மக்கள் காட்டிய ஈடுபாடும், விளையாட்டுத் துறையிலே பெற்ற அனுபவங்களும், அபூர்வ கண்டுபிடிப்புகளும் ஒலிம்பிக் பந்தயங்களில் நிறையப் போட்டி நிகழ்ச்சிகளைப் புகுத்திய தன் காரணமாக, பந்தயங்கள் 5 நாட்கள் நடை பெறக்கூடிய அளவுக்கு விரிந்தன; வளர்ந்தன. ஒலிம்பிக்பந்தயம் தோன்றிய காலம் 8000ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.