7. பருதயம் நடந்த விதம் முதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம், ஒரே நாள் மட்டும்தான் நடந்தது. என்றால், போட்டியும் ஒன்றே ஒன்றுதான் நடந்தது. அதுதான் ஒட்டப் போட்டி (Foot race)- அந்த ஒரு போட்டியில் வெற்றி பெறு: வதற்குள், வீரர்கள் பலமுறை அதாவது கால் இறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி. இறுதிப் போட்டி என்று. அடைய மிகவும் சிரமப்பட்டுத்தான் ஒடவேண்டியிருந்தது. அவர்கள் ஒடிய தூரம் 215 கெஜ தூராம்தான்.
அதிகாலையிலேயே ஒட்டப் போட்டி ஆரம்பமாகிவிடும். அதிகாரிகள் அனைவரும், பந்தயம் முடிவு பெறுகின்ற இறுதிக் கோட்டில், தங்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் மரத்தாலான உயர்ந்த முக்காலிகளில் அமர்ந்துகொண்டு விடுவார்கள். ஒரு தேர்வோட்ட முறையில் (Heat) ஒடுவதற்கு 4 பேர்தான் அனுமதிக்கப் பட்டனர். ஆகவே, அந்த நான்கு பேர் யார் என்பதற்காகச் சீட்டுப் போட்டு பெயர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களே ஒடவும்: அனுமதிக்கப்பட்டனர் . ஒடத்தொடங்கும் கோட்டில் வந்து அவர்கள் நிற்பார்கள். அந்தக் கோடு வெண் சலவைக் கல்லால் ஆக்கப்பட்டிருந்தது. அதேபோல, ஒட்ட முடிவெல்லைக் கோடும் (Finishing Line) தங்கமுலாம் பூசியக் கற்களால் பகிக்கப்பெற்றிருந்தன. அங்கேதான் அதிகாரிகள் விரச் கணேத் தேர்ந்தெடுக்க வீற்றிருந்தனர்.