77.
78.
79.
- நல்ல இரண்டு திருவடிகளை, சிந்திக்க - தியானம் செய்ய, நல்லருள் - நல்ல கிருபையை, நீ புரிவாய் - தேவரீர் செய்தருள வேண்டும். மின்னும் - பிரகாசிக்கும். சுடர்வேல் - ஒளியை உடைய வேலாயுதத்தை, இது மேல் வரும் மேலவனுக்கு அடை. இரத்தினகிரி - இரத்தினகிரியில், உறை - எழுந்தருளியிருக்கும். மேலவனே - எல்லாருக்கும் மேலாக உள்ள பால முருகனே.
மேலவன் - மேலே உள்ளவன். கீழவன் - கீழே உள்ளவன். நாப்பண் உள்ளான் - நடுவில் இருப்பவன், எங்கும் - எவ்விடத்திலும், மேய - தங்கிய பிரான் - கடவுள். காலனைக் காலால் உதைத்தவன் - யமனைத் தன் திருவடியால், மார்க்கண்டனை அந்த யமன் பிடிக்க வந்தபொழுது உதைத்த சிவபெருமானுடைய, சேய் - திருமகன். எனை - அடியேனை காத்திடுவான் - பாதுகாத்து அருள்புரிவான். சீலம் ஆர்ந்தோர் - நற்குண நற்செயல்கள் நிரம்பிய சான்றோர்கள். போற்றும் - வாழ்த்தி வணங்கும். ரத்ன கிரியில் - இரத்தினகிரியில், திகழுகின்றான் - விளங்குகின்றான். பாலமுருகன் எனும் பெயர் - பால முருகன் என்று சொல்லும் திரு நாமத்தை சொல்லி - சொல்லித் துதித்து. பரவிட - வாழ்த்தி வணங்க,
பரவி - துதித்து. பணிந்து - வணங்கி. பல பெரியோர் பாடல் - அருணகிரிநாதர் முதலிய பெரியோர்களின் திருப்புகழ் முதலிய பாடல்களை பாடி நின்று - பாடிப் பாலமுருகனுடைய சந்நிதியில் நின்று. விரவிய - கூடிய தொண்டருடன் - பக்தர்களோடு. பயின்று - பழகி. அன்னவர் - அந்தப் பக்தர்களுடைய. மேன்மையினை - பெருமையை, இன் சாரியை. கரவு - மறைத்தல். உளத்தினைக் கண்டு - மனத்தில் உள்ள பக்தியை அறிந்து. அவர்-அந்தப் பக்தர்களுடைய. காலில் - திருவடிகளில், விழுந்து - சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, உரம் - அறிவை, பெற - அடைய. அருள் - திருவருள் புரிவாய். ரத்னகிரி-இத்தினகிரியில். உறை-எழுந்தருளியிருக்கும். உத்தமனே - உத்தமமான பண்புகளை உடையவனே : "உத்தமன் அத்தன் உடையான்" (திருவாசகம்).
அத்தன் - அப்பன் தலைவன். உடையான் என்னை உடையவன் ; என்னை ஒரு பொருளாகக் கருதி ஏற்றுக் கொண்டவன். அடியே - திருவடிகளையே ஏ - பிரிநிலை வேறு ஒன்றும் நினையாமல் என்றபடி : "அடியே நினைந்துருகி" (திருவாசகம்). உளம் நினைந்து - மனத்தில் தியானித்து. மத்த மனத்தொடு - பைத்தியம் பிடித்த மனத்தோடு, மால் இவன்-பைத்தியம் பிடித்தவன் இவன். என்ன - என்று என்னைப் பார்த்தவர் சொல்ல : "மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனநினைவில், ஒத்தன ஒத்தன பேசிட' (திருவாசகம்). வகுத்திடுவாய் - என்னை அமையச் செய்தருள்வாய், சத்தம் - ஒலி.
45