விழா நாட்களைக் குறித்து விமரிசையாகப் பாடி மகிழ்வார் புலவர்கள். விழி மயக்கும் ஓவியங்களைத் தீட்டி மக்களைக் கவர்வர் ஓவியர்கள். சிந்தனைக்கு உயிர் கொடுத்து, செழுமை சிந்து பாடும் சிறந்த வீரர்களைச் சிலை வடித்துக் களிப்பார்கள் சிற்பிகள். பார்ப்போருக்கும் பங்கு பெறுவோருக்கும் படைக்கப்பட்ட வீர விருந்துதான் ஒலிம்பிக் விளையாட்டுக்கள். வீரமும் விவேகமும் ஆற்றலும் ஆண்மையும் ஒன்றுடன் ஒன்று அலைபோல மோதிக்கொள்ளும் அருமையான களமல்லவா பந்தயக் களம் ! போட்டி தொடங்குவதற்கு முன் எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.
ஒலிம்பிக் பந்தயத்தின் திடல் 215 கெஜ நீளமும், 85 கெஜ அகலமும் கொண்டதாகும். அந்த பந்தயத் திடலைச் சுற்றி நாற் பதினு பிரம் மக்களுக்குமேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கக் கூடிய உட்காரும் இடம், புல் தரையி. குலும் படிக்கட்டு போன்ற அமைப்புக்களுடனும் கட்டி முடிக்கப் பெற்றிருந்தன. இந்தப் பந்தயத் திடல் நாற்பது அடி உயரமுள்ள சீயஸ் என்ற கடவுளின் சிலையிருக்கும் பீடத்திற்கு எதிரிலேயே எழிலாக அமைக்கப்பட்டிருந்தது.
பந்தயம் நடத்துவதற்குரிய செலவுகள் அனைத்தும், பொதுமக்கள் மனமுவந்து வாரி வழங்குகின்ற பெருங். கொடையின் மூலமும். நகரங்கள் நல்குகின்ற தானத்தாலும் போட்டியில் பங்கு பெறுகின்ற வீரர்கள் இழைக் கின்ற தவறுகளுக்குரிய அபராதத்தின் மூலமும், ! மற்: விரும்பத்தகாத காரியங்களுக்கான அபராதத்தின் అఖీ சேர்ந்த தொகைகளால்தான் சரிகட்டப் பெற்றன.