உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


பணம் வாங்கிக் கொண்டு; அவர்களும் ஒதுங்கிகொண்டார்கள். இந்தச் செய்தி, அதிகாரிக்குத் தெரிந்துவிட்டது. அவனைஅவமானப்படுத்தியதோடு மட்டுமல்ல,அவனுக்குப் பெருந்தொsை, ஒன்றையும் அபராதமாகவும் விதித்தார்கள்,

இவ்வாறு குறுக்கு வழிகளைக் கையாண்ட கோணல், மதி கொண்ட வீரர்களிடம், கொடுமையான முறையில் அபராதத்தை வசூலித்தார்கள். வசூலித்தத் தொகையை செலவழித்து, குற்றம் செய்த வீரர்களைப் போலவே சிலைகளை செதுக்கி, ஒலிம்பிக் பந்தயக் களத்தின் தலை வாசலிலே வரிசையாக நிறுத்தி வைத்தனர். 1300. ஆண்டுகள் ஒலிம்பிக் பந்தயம் நடந்தாலும், இவ்வாறு அபராதம் தந்து சில வடிவான வர்களின் எண்ணிக்கை 13 பேர் தான் என்று நாம் அறியும் போது, குறுக்கு வழியை யாரும் அதிகமாக விரும்பவில்லை என்றே உணர முடிகிறது. இது போன்ற சிலைகளுக்கு சேன் (zane) என்று பெயர் இவ்வாறு சிலை அமைத்ததன் நோக்கம். இத்தகைய அலங் கோலமான, அவமானரகமான சிலைகளைப் பார்க்கும், போதாவது. மற்ற வீரர்கள் மனிதப் பண்பாட்டுடனும், விரப் பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் என்று. நம்பியே, அயோக்கியர்களுக்கும் இந்நாட்டினர் சிலை சமைத்தனர்.அதிகரிகள் மட்டும் சிலை சமைக்கவில்லை.நாட்டு மக்களும் தாங்கள் விரும்பிய வீரனுக்கு, அவன் உண்மை போரிட்டாலும், தவறினை இழைத்துச் சண்டையிட்டாடாலும் சரி. எதற்கும் கவலைப்பட்டாமல் சிலை அமைத்தார்கள் அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

தவருகவே, போட்டிகளில் போட்டியிடுவான். என்பதற்காக.' தியாஜலிஸ்' என்பவனை ஒலிம்பிக் பந்தயகணி