உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

என்று வாழ்நாள் முழுவதும் செயலாற்றி வந்த நாடு கிரேக்க நாடு இந்த நாட்டிலே உள்ள புனிதமான இடம் ஒலிம்பியாவாகும். இப்புனித மண்ணிலே தோன்றிய விளையாட்டுக் களைத்தான் 'ஒலிம்பிக் பந்தயங்கள்' என்று அந்நாட்டினர் அழைத்தனர்.

ஒலிம்பியாவிலே, கிரேக்க நாட்டுக் கடவுளர்களில் ‘சியஸ்' என்று அழைக்கப் பெறும் தலைமைக் கடவுளின் கோயில் இருந்தது. (நம் நாட்டுக் கடவுளான சிவனைப் போல). சீயஸ் சிலையமைந்த அக்கோயிலின் முன்னே அமைக்கப் பெற்ற விளையாட்டு அரங்கத்திலே தான். அத்தனைப் பந்தயங்களும் அந்நாளில் நடந்தேறின

சீயஸ் என்ற கடவுளுக்கும், விளையாட்டுப் பந்தயங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம் கடவுளைக் காட்டித்தான் இந்தக் கதையே தொடங்குகிறது உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும், 40 அடி உயரம் அமைந்ததாகத் திகழும் சீயஸ் பீடத்தின் முன்னே நிகழ்கின்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும், கடவுளால் தான் தொடங்கப் பெற்றன என்பதற்கு பல கதைகள், பல புராண வரலாறுகள், தேவைக்கு அதிகமாகவே உள்ளன.

பொலிவான, வலிவான உடல் மட்டும் கொண்டவர்கள் அல்லர் கிரேக்கர்கள் கவின் மிக்கக் கற்பனைகளோடு கதை புனைவதிலும், சிலை வடிப்பதிலும் வல்லவர்கள் நம் நாட்டுப் புராணக் கதைகளுக்கும் சற்றும் சளைத்தவையல்ல அவர்கள் கூறும் கதைகள். விளையாட்டுப் பந்தயங்களைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல, விளையாட்டரங்கத்தை அளந்து கட்டி முடித்தவரும் கடவுளேதான் என்று கூறும் அளவுக்கு அவர்கள் கதைகள் அழகாகச் செல்லுகின்றன.

கதையின் காரணத்தை அறியப் புகுந்தால், அவர் தம் வாழ்க்கைமுறை அவ்வாறு இருந்ததுதான் காரணம்