பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்காலத்திலும். வாழ் - எழுந்தருளியிருக்கும். பெருமான் - தலைவனாகிய பால முருகன். சாது ஆம் துறவி ஆகிய பாலமுருகன் அடிமையுள் - பால முருகன் அடிமை என்னும் துறவியின் மனத்திற்குள். தங்குவன் - எழுந்தருளி இருப்பான்.

தங்கம் - பொன் என்னும் உலோகம். பெரிது என்று - எல்லாவற்றிலும் சிறந்தத என்று. வீணே-வீணாக, முயன்று - அதைப் பெறுவதற்காக முயற்சி செய்து தவிப்பவர்கள் - அதைப் பெறாமல் தவிப்பை அடையவர்கள். மங்குவர் - இறந்து போவார்கள். பால முருகன் மருவிய - பால முருகன் எழுந்தருளிய. மாமலை ஆம் - பெருமையை உடைய மலை ஆகிய துங்கம் - பரிசுத்தம் உடைய, இரத்தின நற் கிரி - நல்ல இரத்தின கிரியில். மேவிய - எழுந்தருளியுள்ள. சுந்தரனை - என்றும் அழகிய பால முருகனை, "என்றும் இணையாய அழகியாய' என்று பிறர் கூறுவது காண்க. மங்களம் - மங்கலம் உடைய, பால முருகனை - இரத்தின கிரியில் எழுந்தருளிய பால முருகனை. வாழ்த்தின் - வாழ்த்தி வணங்கினால், வளம் - செல்வம் முதலிய வளப்பங்கள். வரும் - உண்டாகும், ஏ கட்டளைக் கலித்துறையின் ஈற்றில் ஏகாரம் வருவது மரபு. -

வருவதும் - இந்தப் பூமியில் பிறப்பதும். போவதும் - இறந்து போவதும். ஆய ஆகிய பிறப்பு - பிறவியிலும், மரணத்தினில் - சாவினிலும். மருவுறு - அடைகின்ற, துன்பம் - துன்பங்களை, அகற்ற - போக்க, என்றால் - என்று விரும்பினால். ஓர் வழி - அதற்குத் தக்க ஒரு வழியை, சொல்லுவன் - கூறுவேன். திருஉறும் - அழகு பொருந்திய, சீர்கொள் - சிறப்பை உடைய. இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியில். தேவனை - எழுந்தருளியுள்ள பால முருகனை, ஏ. ஆசை நிலை. குரு என குரு என்று எண்ணி, போற்றி - வாழ்த்தி. வணங்கிடின் - பணிந்தால். இன்பம் - பல வகையான இன்பங்கள். குலவுறும் - நம்மை வந்து அடையும்.

குலவுலர் - பல இடங்களுக்குச் செல்லுவார்கள். மாதர்கள் தம்மொடு - பெண்களோடு, கூடி - புணர்ந்து. குதுகலிப்பர் - மகிழ்ச்சியை அடைவார்கள். இரத்தின மா மலையில் - பெருமையை உடைய இரத்தினகிரியில். நிலைபெறும் - நிலையாக எழுந்தருளியிருக்கும். பால முருகனை - பால முருகன் என்னும் திரு நாமம் உடைய வேலவனை ஏத்திடின் - துதித்து வணங்கினால், இன்பு நீடும் - இன்பங்கள் நெடுங்காலத்துக்கு நம்மிடம் இருக்கும்.

இன்பம் - இன்பங்கள். இனிமேலும் - இதற்கு மேலும். வேறு ஒன்று

- பிறிது ஒன்று. உண்டு - இருக்கிறது. என்ன - என்று, ஏ அசை நிலை. எண்ணல் இன்றி - எண்ணுவது இல்லாமல், மன் -

23