பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14,

15.

16.

துன்னிடின் - வாழ்ந்தால். என் பயன் - என்ன பிரயோசனம்? ரத்னகிரி - இரத்தின கிரி என்னும் தலத்தில். உறை - எழுந்தருளியுள்ள துங்கவன் ஆம் - பரிசுத்தமானவனாகிய, மன்னவன் - பாலமுருகனுடைய, பூந்தாள் - தாமரை மலரைப்போன்ற திருவடிகளை உடைய, சரவணன் - சரவணப் பொய்கையில் தவழ்ந்தவனாகிய முருகனுடைய பாதம் - திருவடிகளை. வணங்குமின் - பணியுங்கள்.

சரவணப்பொய்கையில் - தருப்பைப்புல் வளர்ந்த சரவணப் பொய்கையில். சரம் - தருப்பை, தோன்றிய - வளர்ந்த ஆறு பேர் - ஆறு கிருத்திகை மாதர்கள், தாம் : அசை நிலை. சுரந்து - தம் கொங்கைகளிலிருந்து சுரக்கச் செய்து, மருவிய - உண்டாகிய, பாலினை - முலைப்பாலை. உண்ட - குடித்த பிரான் - கடவுளாகிய முருகன். ரத்ன மாமலையில் - பெருமையை உடைய இரத்தினகிரியில். திரு உரு - அழகிய வடிவத்தை உடைய, பால முருகன் அடிமைக்கு - பால முருகன் அடிமை என்ற பெயரை உடைய துறவிக்கு. தேசு பெற - ஒளி உண்டாகும்படி தேசு தேஜஸ் என்ற வட சொல்லின் திரிபு. அருளிய கருணை பாலித்த, நாதன் - பால முருகனுடைய. அருள் உறின் - திருவருளைப் பெற்றால், வாராதவை - கிடைக்காத நல்ல பயன்கள். உளவோ - இருக்கின்றனவோ ? இல்லை என்றபடி,

உளத்தும் நினைமின்கள் - உங்களுடைய மனத்திலும் தியானம் செய்யுங்கள். வாயால் புகழை உரைத்திடு மின் - உங்களுடைய வாயினால் பாலமுருகனுடைய புகழைச் சொல்லுங்கள். திளைக்கும் - இன்பத்தை அடையும். இரத்தின நற்கிரி - நல்ல இரத்தினகிரியில். வேலவன் - எழுந்தருளியுள்ள பாலமுருகனுடைய திருவடியில் - அழகிய சரணாரவிந்தங்களில். இளைப்புற - அடிக்கடி விழுந்த வணங்குவதனால் களைப்பு உண்டாகும்படி வீழந்து. சாஷ்டாங்கமாக வீழ்ந்து. பணிமின்கள் - வணங்குங்கள். எந்த இனலும் - எந்த விதமான துன்பங்களும் இனல் இடைக்குறை. அறும் - போய்விடும். களைப்பு இலா - களைத்தல் இல்லாத. நல் முயற்சிக்கண் - நாம் செய்யும் நல்ல முயற்சிகளில், பயன் உறும் - அவற்றுக்குரிய பிரயோசனம் கிடைக்கும். காமுற - நாம் விரும்பியபடி,

காமர்கள் ஆயிரம் பேர் எனினும் - ஆயிரம் மன்மதர்கள் என்றாலும். கவின் - அவர்களுடைய அழகு. காலில் - பாலமுருகனுடைய திருவுடிகளில், உள ஆம் இருக்கிறதாகிய, அந்தத் தூசினுக்கு -

அந்தப் பொடிக்கு. ஒவ்வார் - ஒப்பாக மாட்டார்கள் : "ஆயிரம் கோடி

காமர் அழகெலாம் திரண்டொன் றாகி, மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில், மேய இவ்வெழிலுக் காற்றா தென்றி.டின்

26