பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.

18.

19.

இனைய செவ்வேள், மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார் வகுக்கற் பாலார்” என்ற கந்த புராணச் செய்யுளை அடி யொற்றியது இது. எழில் - இந்தப் பால முருகனுடைய அழகு. சாற்றுமதோ - சொல்லுவதற்கு அடங்குமோ ? éy fy மருங்கில் - சிவபெருமானுடைய - இடப் பாகத்தில் உள்ள உமை - பார்வதி. மகிழ்ந்து - மகிழ்ச்சி பெற்று. ஏ அசை நிலை. பால் - தன்னுடைய முலைப்பாலை. வழங்க - ஊட்ட இன்பம் - அதனால் இன்பத்தை. ஏமம் உற - சேஷமம் உண்டாக, பெற்ற - அடைந்த ரத்ன கிரியனை - இரத்தினகிரியில் எழுந்தருளியிருக்கும் பால முருகனை, ஏத்து - துதித்து வணங்குவாயாக, நெஞ்சே - என்னுடைய மனமே.

சேய - சிவப்பான நிறத்தை உடைய திருமேனியை உடையவானகிய குகன் - தகராலயமாகிய குகையில் எழுந்தருளியிருப்பவன். கார்த்திகை மாதர் - கார்த்திகைப் பெண்களாகிய ஆறுபேர். தரு பால் - தந்த முலைப் பால், தெவிட்டியதால் - தெவிட்டிப் போனமையால், ஆய் - தன்னுடைய தாயாகிய பார்வதி தேவி. தரு - கொடுத்த, பாலை - முலைப்பாலை, குடித்தான் - பருகினான். இரத்ன அரும் கிரியில் - அருமையான இரத்தினகிரியில், வேய்தரு - மூங்கிலைப் போன்ற, தோளினை - தோள்களை உடைய வள்ளி நாதன் - வள்ளி நாயகியின் கணவனாகிய பால முருகன் விளங்குகிறான் - எழுந்தருளி யிருக்கிறான். பாய்தரும் - பாய்கின்ற. அன்புடன் - பக்தியோடு. அன்னான் - அந்த பால முருகனுடைய. திருத்தாள் - திருவடியினை, பனிகுவம் - வணங்குவோம்.

பணி அணி ஈசன் - பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவபெருமான். பிரணவத்தின் பொருள் - பிரணவ மந்திரமாகிய ஓங்காரத்தின் அர்த்தத்தை. பண்புடன் - முறைப்படி. ஏ அசைநிலை. அணிபெற - அழகு உண்டாக. ஓதுக என்று - சொல்லுவாயாக என்று : ஒதுகென்று தொகுத்தல் விகாரம் ஏ அசைநிலை. சொல - சொல்ல. அங்ங்ன் - அப்படியே. அருளியவன் - ஒதிய பால முருகன். திணிபெறு தோளன் - உறுதியைப் பெற்ற பன்னிரண்டு தோள்களை உடையவன். இரத்தின நற்கிரி - நல்ல இரத்தின கிரியில். சேர் - எழுந்தருளி யிருக்கும். முருகன் - பால முருகன். மணி - கிங்கிணி மாலையை அணி - அணிந்த தாளை - திருவடிகளை வணங்கிடின் - பணிந்தால். காலன் - யமன், வருகை - அகாலத்தில் நம் உயிரைக் கொண்டு போக வருவது. இன்று - இல்லையாகும் ; அகால மரணம் நேராது என்பது கருத்து.

போகுவம் - போவோம். நன்று - நன்மை, வாணாளை - வாழும் காலத்தை. நண்ணல் - சேர்தல். ஒன்றிய சேர்ந்த, இன்னே -

27