பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


20.

21.

22.

23.

24.

25.

இப்பொழுதே, ரத்ன ஓங்கலினில் - இரத்தினகிரியில், வென்றி - வெற்றியை, வீழ்குமின் - விழுந்துவணங்குங்கள்.

வீழ்ந்த இறந்துபோன, எத்துணை - எவ்வளவு, வேந்தர் - அரசர். காலன் - யமன். மானிடர்காள் - மனிதர்களே, சூழ்ந்து - சுற்றிவந்து: வலம் செய்து, பிரதட்சணமாக வந்து. பணிமின்கள் - வணங்குங்கள். தாழ்ந்து - தாழ்வாகப்போய். உறும் அடைந்து வணங்குங்கள்.

உறும் - போர் செய்யவந்த தாரகன் - தாரகாசுரன், உலைவு - துன்பத்தை வெறும் - உள்வெளியான கிரவுஞ்சகிரி - மலையாக நின்ற ஓர் அசுரன். சுடர் - ஒளி, ஆண்டிருப்பான் - எழுந்தருளியிருப்பான். நறும் - வாசனை வீசும். தார் - மாலையை, அணி - அணிந்த குகன் - பாலமுருகன். நாடுமின் - தேடிச் சென்று வணங்குங்கள்.

விழைவு - விரும்பிய பொருள்களை. கூடின் - அடைந்து வணங்கினால், திண்ணம் - உறுதி. ஐயம் - சந்தேகம். இலை - இல்லை; இடைக்குறை. குறிக்கொண்டு - லட்சியமாகக் கொண்டு. அவன் - பாலமுருகனுடைய, ஏத்தி - புகழ்ந்து பணிகுமின் - வணங்கங்கள், வீடு - முக்தி. இம்மை - இகலோக வாழ்வு.

மேய - பொருந்திய வீரம் உறு வாகு - வீரபாகு. அவுனன் - சூரபத்மன். பணிய - வணங்க, அமரர் - தேவர்கள். விடுத்தாய் - விடுவதைச் செய்தாய். பிழைகள் - தவறுகளை பொறுத்திடுவான் - மன்னிப்பான். என - என்று நம்பி. போந்து - போய். ஆயவன் - அந்தச் சூரபத்மன். சற்றும் - சிறிதும். தணிகிலன் - தணியவில்லை. இகல் - பகைமை. விதி - அவனுடைய தலைவிதி.

அன்னவன் - அந்தப் பால முருகனுடைய தாள் இணை - இரண்டு திருவடிகளில் வீழ்ந்து - சாஷ்டாங்கமாக விழுந்து. இறைஞ்சின் - வணங்கினால், சதி - துன்பத்தை தவிர்த்தது - நீங்கியது. மதி - ஞானம், வகை - முறையை , அருணகிரிநாதன் சொன்ன வகை : "சேல்பட்டழிந்தது. செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின், மால் பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன், வேல்பட் டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்அவன், கால்பட்டழிந்ததிங் கென்தலை

மேல்அயன் கை யெழுத்தே" என்பது கந்தர் அலங்காரப் பாசுரம்,

எண்ணுமின் - எண்ணுங்கள். தலைமேல் எழுத்து - விதி.

அற்றவர்க்கு - வறியவர்களுக்கு. ஈமின் - கொடுங்கள். செய்மின் - செய்யுங்கள். அடல் - வலிமை கொற்றவன் - பாலமுருகன். பாலன் - பாலமுருகன். குரை கழலை ஒலிக்கின்ற வீரக் கழலை. உற்று - அடைந்து தொழு திடின் - வணங்கினால், பற்று - பாசம்.

28