உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

உலக வரலாற்றில்


சூழ்நிலையை மக்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் உருவாக்கியதற்கு பின்பே இவ் உலகை விட்டு மறைந்தார்.

வறுமையில் வாடும் ஏழைத் தொழிலாளர்களின், துன்பத்தை நீக்கி, இன்பவாழ்வை ஓங்கச் செய்ய காரல் மார்க்ஸின் கொள்கை சிறந்த வழிகாட்டியாக அமைந்துவிட்டது. பகுத்தறிவும், நேர்மையுமுடைய எந்த மனிதருக்கும் எந்தக் கட்சிக்கும், எந்த அரசுக்கும், கருத்து வேற்றுமை இருக்க இயலாது. ஆனால், அந்த உயர்ந்த தத்துவ முறையை தொழிலாளர்கள் அடைவதற்குத் துன்பங்களும், துயரங்களும் ஏற்படலாம். குறிக்கோள் சிறந்ததாக இருத்தல் மட்டும் போதாது, அதனை பெறுகின்ற நெறியும், தூயதாக இருக்கவேண்டும். மார்க்ஸின் தொழில் துறைத்தத்துவம், சிறந்த நெறியின் மூலம் அடையக்கூடும்.அது தொழிலாளர் உலகிற்கு மிகச் சிறந்த நன்மையாக காட்சித்தரும்.


தூக்கு மேடை முழக்கம்

எனது தாய் நாடு சுதந்திரம் அடைய வேண்டும். அந்த மண்ணின் சுதந்திரக் காற்றை நான் சுவாசிக்க வேண்டும். செக்கோஸ்லேவியா நாட்டின், விடுதலை வீரன் ஜீலியஸ்-