உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



28

உலக வரலாற்றில்



மார்க்ஸ் நூல்கள் பல இயற்றி இருந்தாலும், அவற்றுள் ‘மூலதனம்’ என்ற நூல் மிகச்சிறந்த நூலாகும். தொழிலாளர்களுக்கு அது ஒரு மறை நூலாக கருதப்படுகிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. 1859–ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற டார்வின் உயிரினங்களின் தோற்றம். என்ற ஒரு நூலை எழுதி அப்பொழுதுதான் வெளியிட்டார். அதே நேரத்தில், அரசியல் பொருளாதார திறனாய்வு என்ற நூலை மார்க்ஸ் எழுதியிருந்தார். காரல் மார்க்சுக்கு பலமொழிகள் தெரியும். அவருடைய தாய்மொழி ஜெர்மன், அத்துடன் ஆங்கிலம், பிரஞ்சு, ருசியா ஆகியமொழிகளையும் கற்றார்.

ஓய்வின்றி மார்க்ஸ் உழைத்ததின் பயனாக அவருடைய உடலில் கல்லீரல் கட்டி உண்டாயிற்று. அதனால் உடல்நலம் குன்றினார். சிறந்த மருத்துவர்களால் அந்நோய் குணமானது. உடனே ப்ளுரசி என்ற நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில், அவருடைய மனைவி புற்றுநோயால், தீராத துன்பத்தை அடைந்தார். 1881-ல் மார்க்ஸ் மனைவி இறந்தாள். அதற்கு பிறகு 1883-ம் ஆண்டில் அவருடைய மூத்த மகள் திடீர் என மறைந்தாள். அந்த ஆண்டிலேயே சாய்வு நாற்காலி ஒன்றிலே சாய்ந்த படியே மார்க்சும் காலமானார்.

மார்க்ஸ் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை அயல் நாடுகளிலே கழித்தார். இங்கிலாந்தில் இவர் வாழும் பொழுதுதான். இவர் புகழ் பரவியது. அவர் பிறந்த ஜெர்மனி