32 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா வெளியேற்றுகிறது. குறைந்தது 72 தடவையாவது ஒரு நிமிடத்திற்கு இதயம் சுருங்கி விரிகிறது. ஆகவே இதயமானது அரைமணி நேரத்திற்குள்ளாக 260 *குவார்ட்ஸ் இரத்தத்தை உடலுள் இறைக்கிறது. ஒரு நாளைக்கு அது வெளியேற்றும் இரத்தமோ 13,000 குவார்ட்சுக்கு மேல் போகிறது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். அது ஆண்டுக் கணக்காக என்றால் எப்படியிருக்கும்? 70 ஆண்டுகள் ஓர் இதயம் வேலை செய்தால், அந்த இதயம் இறைத்த அந்த இரத்தத்தின் அளவு குறைந்தது 77,000,000 காலன் இருக்கும். அந்த இரத்தத்தை சேமித்து வைக்கும் பாத்திரத்தின் அமைப்பு 10 டன் எடையுள்ள பாத்திரத்தில் 10 மைல் உயரமுள்ள அளவு நீண்டு நிறைந்திற்கும் என்று இரத்த சேமிப்பின் அளவை நிர்ணயிக்கின்றனர். ஒரு மணி நேரம் இதயம் பணியாற்றினால் ஒரு மனிதனை 5 அடுக்கு மாடிக்குத் தூக்கி செல்கின்ற சக்தி என்று சொல்ல வந்த ஆராய்ச்சி நிபுணர் ஒருவர் கூறுகின்றார். 2 ஆண்டுகள் 2 இதயங்கள் சேர்ந்து செய்கின்ற வேலையின் வலிமையானது, ஒரு லாரியை உலகம் முழுவதும் இழுத்துக்கொண்டுபோய் சுற்றி வருகின்ற சக்தியைப் பொறுத்தது என்று கூறும்போது நம்மை அறியாமலே நாம் வாய்விட்டு அலறிவிடுகிறோம்.
- குவார்ட்ஸ் என்றால் காலன் அளவில் நான்கில் ஒரு பாகம் ஆகும்.