பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O . டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அதுதான், அந்த விடைதான் அகில உலகத்தையும் அற்புதமாக வாழ வைக்கின்ற சக்தி படைத்ததாகும். எதற்காக உடற்பயிற்சி செய் கிறோம் என்றால் இன்பமாக வாழத்தான்! இன்பமான வாழ்க்கை வாழ்க்கையின் இலட்சியமே இதுதானே! இலட்சியத்திற்கு இலக்கு நமது உடல். உடம்பில் இருந்துதானே உலக வாழ்க்கையே தொடங்குகிறது. - பசுமையான புல், அசைந்தாடும் செடி கொடிகள், பாடித் திரிகின்ற பறவைக் கூட்டம், நடைபோட்டு மகிழ்கின்ற மிருக இனம், ஊர்வன, நடப்பன, மிதப்பன, நீந்துவன. அத்தனை உயிரினங்களையும் பாருங்கள். அடுத்து, உங்கள் உடலையும் உற்றுப் பாருங்கள். விலை மதிக்க முடியாத மாணிக்கம்! விண்ணும் மண்ணும் காட்டாத வண்ணக் கோலம்! கலைக் கோயிலாகக் காட்சி தருகின்ற காவிய அமைப்பாக உங்கள் உடல் தோற்றமளிக்கவில்லையா? ஆமாம்! உயிருள்ள இனங்களிலே உன்னதமான படைப்பு மானிடப் படைப்புதான். அரிதரிது மானிடப் பிறவி அல்லவா! அதுதான் மனிதப் பிறவியின் சிறப்பு. ஒவ்வொரு உயிரும் உண்ணுகிறது, வாழ்கிறது, வளர்கிறது, மடிகிறது. ஒப்பற்ற மனித இனமும் உண்ணுகிறது, வாழ்கிறது, வளர்கிறது, மடிகிறது! ஆனால், இரண்டுக்கும் ஒற்றுமை செயலிலே இருந்தாலும், தரத்திலே வேற்றுமை தென்படுகிறதே!