உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

இலங்கைக் காட்சிகள்

ரஸிகர்களுடைய கூட்டத்தில் பேசுவதென்றால் பேச்சாளர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். சமுத்திரம் ஆளைக் கண்டால் கொந்தளிக்கும் என்று சொல்வார்கள். 'ஆள்கண்ட சமுத்திரம்' என்று பழமொழிகூட வழங்குகிறது. அது எத்தனை தூரம் உண்மையோ நான் அறியேன். மேடையில் ஏறிப் பேசுகிறவர்கள் திறத்தில் இந்த உண்மை பொருந்தும். அவர்களே ஆட்கண்ட சமுத்திரம். உம்மென்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டிருக்கிறவர்களின் கூட்டத்தில் பேசவே தோன்றாது.

என்னுடைய ஆசிரியராகிய ஸ்ரீமத் ஐயரவர்கள் சொல்வதுண்டு: "சிலர் இருக்குமிடத்தில் ஒன்றுமே பேசத் தோன்றுவதில்லை. நாம் என்ன பேசினாலும் இதைக் காட்டிலும் நாம் நன்றாகப் பேசலாமே என்று சிலர் பொறாமையுடன் இருப்பார்கள். சிலர் நாம் பேசுவதில் சிறிதும் அக்கறையில்லாமல் எங்காவது சிந்தையை ஓட விட்டிருப்பார்கள். அவர்கள் முகத்திலே கொஞ்சங் கூடப் பொலிவு இராது. அவர்களுக்கு நடுவே நாம் அகப்பட்டுவிட்டால் நம்முடைய முகத்திலும் அசடு தட்டிவிடும். பேசுவதற்கும் விஷயம் வராது. மிகவும் எளிதில் கை வந்த பொருளெல்லாம், இங்கே எதற்காக வெளிப்பட வேண்டும் என்று ஒளிந்துகொள்ளும்" என்று சொல்வார்கள். சொற்பொழிவு விஷயத்தில் இது எவ்வளவு உண்மை என்பதை அநுபவித்தவர்கள் நன்கு உணர்வார்கள்.

இதற்கு நேர்மாறாக, உண்மை அன்பும் ஆர்வமும் உடையவர்கள் கூடிய அவையில் பேசினால் நமக்கு உண்டாகும் உணர்ச்சியே தனிவகை. புதிய புதிய