16. ஒலிம்பிக் பந்தயத்தில் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி
ஒலிம்பிக் பந்தய விளையாட்டுக்களின் பண்பு நிறைப் போட்டிகளில் பங்கு பெறுகின்ற நாங்கள், நடைமுறை விதிகளே மனமார ஏற்று, மதித்து, நிறைந்த விருப்போடும் நிலையான உணர்வோடும், பெருந்தன்மையுள்ள உடலாளர் களாக நடந்து கொண்டு, நாட்டின் பெருமையும் விளையாட்டுகளின் புகழும் வீறுபெற்று ஒங்கப் போட்டி விடுவோம் என்று உறுதி கூறுகிருேம்.'
இவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டு போட்டியில் கலந்து கொள்கின்ற வீரர்களின் நோக்கமும், நினவும் ஒலிப்பிக் பந்தயங்களின் லட்சியத்தை அடையும் வழிகளிலேயே இருக்க வேண்டும்.
ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்வதின் நோக்கம் வெற்றி பெறுவதில் அல்ல, பங்கு கொள்கின்ற பங்கிலேதான் அடங்கி இருக்கிறது. வாழ்க்கையின் சிறப்பான அம்சம்கூட, வெற்றி பெறுவதில் அல்ல... வளமாக உளமாரப் போராடுவதில்தான் சிறந்து விளங்குகிறது. பிறரை வெற்றி கண்டு விடுவதில் தான் பேரின்பம் இருக்கிறது என்பதல்ல. அவருடன் எவ்வாறு போரிட்டோம் என்பதில்தான் நிறைந்திருக்கிறது. மேற்கூறிய கருத்துக்களை மனதிலே நிறுத்தி, வலிமையான, பெருந்தன்மை நிறைந்த, மனிதாபிமானம் உள்ள சமுதாயத்தைப் படைப் பதில் தான் ஒவ்வொரு உடலாளனும் கண்ணும் கருத்துமாக