77
பேராடம்பரத்துடன் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தனர். இளவரசர் கான்ஸ்டான்டி சொற்பொழிவு ஆற்றிய பிறகு, ஜார்ஜ் மன்னர், 'அகில உலகத்திற்கான முதலாவது ஒலிம்பிக் பந்தயத்தைத் துவக்கி வைப்பதில் பெருமையடைகிருேம்'. என்று கூறி விழாவினை துவக்கிவைத்தார். புதிய ஒலிம்பிக் பந்தயம் மண்ணுலகில் மறுபிறவி எடுத்தது. 70,000க்கு மேலாக பார்வையாளர்கள் வந்து கண்டு களிக்க, பந்தயங்கள் சிறப்பாக நடததேறின.
மலையேறுதல், உடலழகுப் பயிற்சிகள் செய்தல் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டிகள் நடைபெற்றாலும், அனைவரையும் கவர்ந்திழுத்த நிகழ்ச்சிகள் "உடலாண்மைப் போட்டி நிகழ்ச்சிகளே" (Athletic Events)
100 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 110 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் போன்ற விரைவோட்ட, நெட்டோட்ட நிகழ்ச்சிகள் ; ஒடி வந்து நீளத் தாண்டல், ஓடி வந்து உயரத்தாண்டல், ஓடி வந்து கோலூன்றித் தாண்டல், மும்முறைத் தாண்டல், குண்டு எறிதல், தட்டெறிதல் போன்ற 11 நிகழ்ச்சிகளில் போட்டிகள் நடந்தன.
பழைய ஒலிம்பிக் பத்தயங்களில் இல்லாத ஒரு புது நிகழ்ச்சி, புதிய ஒலிம்பிக் பந்தயத்தில் இடம் பெற்றது. அதுதான். மாரதான் ஒட்டப் பந்தயம் கி ரே க்க வரலாற்றிலே, கீர்த்திமிக்க நிகழ்ச்சியாகப் புகழப்படும் இவ்வரலாறு, தேசப் பற்றும் தியாக நெஞ்சமும் கொண்ட ஒரு மாவீரனின் வீரம் செறிந்த வாழ்க்கை