பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

இ) குறிப்பிட்ட செயலைச் செய்து கற்கும் நிலை. (Execution Stage)

இரண்டாவது கட்டளை முறையானது. ஒவ்வொரு நிலையிலும், நிறுத்தாமல், தொடர்ந்து, தாளலயத்துடன் பயிற்சியைச் செய்வதாகும்.

12. முன்னேற்றம் தரும் பகுதி முறை
(Progressive Part method)

ஒரு செயலுக்குப் பல நிலைகள் உண்டு என்பதை நாம் அறிவோம். இந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்தி என்னவென்றால், ஒவ்வொரு நிலையையும். ஒவ்வொன்றாகவும், தொகுத்தும் கற்பிக்கும் நுட்பமாகும்.

உதாரணமாக : ஒரு பயிற்சியில் முதல் நிலையைக் கற்றுத் தருவது, அடுத்து 2வது நிலையைக் கற்பிக்கும் முன் முதல் நிலையையும் கற்றுத் தந்து, பின் தொடர்வது. பிறகு முதல் இரண்டு நிலையையும் கற்றுத் தந்துவிட்டு மூன்றாவது நிலையைக் கற்றுத் தருவது.

இப்படியாக, படிப்படியாய் நிலைகளைத் தொடர்ந்து கற்றுத் தந்து, செயலின் முழு நிலைக்கு முன்னேற்றிக் கொண்டு வரும் முறையே இதுவாகும்.

ஓடுகளப் பயிற்சிகளுக்கும், தாளலயப் பயிற்சிகளுக்கும் இந்த முறை, சிறந்த கற்பிக்கும் பாங்காக அமைகின்றது.

13. மாட்சிமையுள்ள காட்சி முறை

மாணவர்களுக்கு உற்சாக முறையில் கற்பிக்க உதவும் முறையாக இதைக் கொள்ளலாம்.

மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்று, மாணவர்களுக்குக்