இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99
கீழ்க்காணும் கட்டளைகளை ஆசிரியர் கூற, மாணவர்கள் செய்ய வேண்டும்.
1. | ஒரு வரிசையில் நில் | (Stand in a Single line) |
இயல்பாக நில் | (Stand at ease) | |
நேரே ... நில் | (Atten ...tion) | |
ஓய்வாக நில் | (Stand - easy) |
பிறகு, வரிசையில் நேராக நிற்கச் செய்யும் கட்டளைகளை ஆசிரியர் கொடுக்க வேண்டும்.
வலப்புறம் ... சரிசெய் | (Right...Dress) |
நேரே ... பார் | (Atten...tion) |
இடப்புறம் ... பார் | (Left...Dress) |
நேரேபார் என்று அறிவிப்புக்குப் பிறகு, 1, 2 என்ற எண்ணிக்கையில், மாணவர்களை திரும்பச் செய்ய (Turn) தருகிற கட்டளைகளைக் கொடுக்க வேண்டும்.
வலப்புறம் ... திருப்பு | (Left...Turn) |
இடப்புறம் ... பார் | (Left...Turn) |
பின்புறம் ... பார் | (About...Turn) |
இவ்வாறு திரும்புவதை (Turn) இரண்டு எண்ணிக்கையில் மாணவர்களைச் செய்யுமாறு கற்பிக்க வேண்டும்.
உதாரணமாக வலப்புறம் திரும்பு என்பதைப் பார்ப்போம்.
எண்ணிக்கை | 1: | வலது குதிகால் மீதும், இடது கால் விரல்கள் மீதும் கால்களை சுழற்றி, வலது பக்கமாகத் திரும்ப வேண்டும். |