213
களைப் பங்கு பெறச் செய்யும் உத்தி, இந்த விளையாட்டுப் போட்டிகளில், கடைபிடிக்கப்படுகிறது.
இருக்கின்ற கொஞ்ச வசதிகளே, இந்தப் போட்டிக்கு போதுமானது. இதில் வெற்றி பெறுகிறவர்களின் சாதனைக்கு அவ்வளவு பெறுமிதமில்லை, என்றாலும், குழுக்களுக்குப் பெருமை போய்ச் சேருகிறது. அவ்வளவு தான்.
இந்தப் போட்டியில் இடம்பெறும் சில பிரிவுகள்.
1. குழுக்களின் கூட்டுப் போட்டி (Team or mass Athletics)
2. சலுகைப் போட்டிகள் (Handicap sports)
3. தகவல் வழி போட்டிகள் (Telegraphic sports)
4. திறமறியும் போட்டிகள் (Tabloid sports)
குழுக்களும் கூட்டுப்போட்டியும்
அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கு பெறுகிற போது, ஒடுகளப் போட்டிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும்.
1. மாணவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரிக்க வேண்டும். ஒரு குழு என்றால் 20 முதல் 25 இருக்கலாம்.
2. சில போட்டி நிகழ்ச்சிகளில் அவர்களைப் போட்டி யிடச் செய்யலாம்.
ஓட்ட நிகழ்ச்சிகள் (அ) ஒரு குழுவில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வட்டம் (lap) சுற்றி ஓடி வர, ஒருவர் பின் ஒருவராகச் செய்தல். இதில் எந்தக்குழு குறைந்த நேரத்தில் ஓடி