பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147


வந்து விடுங்க. உங்களுக்குப் பிடித்தமான கோழி பிரியாணி தயாராகிறது உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப் போம்’ என்று அன்பால் எச்சரித்தாள் ஊர்வசி. வெண் முத்துப் பற்களில் பிறை ஒளிர்ந்தது ; ஒளிந்தது.

‘உத்தரவு டியர் !’ பெண் மானாகக் கண்களைச் சி மிட்டினாள் ஊர்வசி !

[12]

மங்கையர்க்கரசிக்கு நல்லமுத வாக்குக் கொடுத்தாள் லேடி டாக்டர்

அம்பலத்தரசனுக்கு அவ்வாக்கு அமுதாகி இனித்தது.

ஆனால், ஏன் அவன் இப்படி அழுகிறாள் ?

‘அழாதேம்மா. நீ பிழைச்சிடுவாய்’ என்று ஆறுதல் படுத்தினாள் டாக்டரம்மாள்.

‘அம்மா, நான் பிழைச்சிடுவேனோ என்கிறத்துக் காகத்தான் அழுகிறேன் அழுகிப்போன உயிர் இது! இது சீக்கிரம் போனால் தான் தேவலாம். கண் கெட்ட பின் னாலே சூரிய நமஸ்காரம் செய்ய முடியுங்களா, அம்மா ?”

“அம்மா, வாழ்க்கைதான் நம்ம கையிலே இருக்கிறதே தவிர, ஜீவன் நம் கையிலே இல்லை. அது ஆண்டவனுக்கு சொந்தம். உன் நிலையும் சீக்கும் எனக்கு புரிஞ்சிட்டுது! நீ பிழைச்சு எழுந்திடுவாய் புதிசாய்ப் பிறந்ததாட்டம் நினைச்சுக்கிட்டு, இனிமே நல்லதனமாய் வாழ்ந்திடு, போதும். கடந்ததையெல்லாம் கனவாகவே நினைச்சிடு. அம்பலத்தரசன் உனக்கு ஆதரவு தருவார். அவரை நீ நம்பலாம்” என்றாள், லேடி டாக்டர் மரகதம்மூர்த்தி,

லேடி டாக்டரின் எம்.பி.பி எஸ். படிப்பு மங்கையர்க்

கரசிக்குப் புது வாழ்வும், புது உயிரும் நல்கிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அம்பலத்தரசனுக்கு. சிகிச்சைக்குரிய கட்டணத் தொகையை டாக்டரம்மாளிடம் கொடுத்து விட்டு, மங்கையர்க்கரசியிடம் சென்றான். அவளுக்கு ஆறுதல் சொன்னான்.