பக்கம்:ஆதி அத்தி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆதி அத்தி .ہمہ چیہ ہستی، ادیب ...... ஆதிமந்தி : என்ன செய்தியோ தெரியவில்லையே! தோழி : புதுப்புனல் விழாவிற்காக அழைப்புக் கொண்டு வந்திருக்கிருர்கள் போலிருக்கிறது. ஆதிமந்தி : ஒகோ, அதுதான?-இதோ தான் வரு கிறேன். அத்தி : ஆதி, விழா அழைப்பு என்று கேட்ட மகிழ்ச்சியிலே என்னைக்கூட மறந்துவிட்டாயே? நான் வரவேண்டாமா? ஆதிமந்தி: உங்களுக்குத்தான் தனிப்பட்ட அழைப்பு வந்திருக்கும், வாருங்கள் போய்ப் பார்க்கலாம். (தோழி முன்னல் செல்லுகிருள். ஆதிமந்தியும் அத்தியும் பின்னல் செல்லுகிருர்கள்.) திரை இரண்டாம் அங்கம் காட்சி ஒன்று (கழார் நகரத்திலே ஒரு விதி. காலை நேரம். புதுப் புனல் விழாவிற்காகப் புறப்பட்ட மாரனும் சாத்தனும் தற்செயலாகச் சந்திக்கிருர்கள். கருநிறமான மாரன் ஒரு சிறிய மூட்டையுடன் காட்சியளிக்கின்ருன். அழுக்கு வடிவமான சாத்தனும் ஒரு சிறு மூட்டை வைத்திருக் கிருன்.) மாரன் : யாரு சாத்தன? எங்கே இப்படிக் காலே யிலே கிளம்பிட்டியே? சாத்தன் : அதுதாண்டா புதுப்புனல் விளாவிலே இன்னிக்கு-காவிரியிலே ஒரு முளுக்குப் போட்டு வர்ர துக்குப் போரேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/35&oldid=742422" இலிருந்து மீள்விக்கப்பட்டது