உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

உலக முன்னேற்றத்திற்கு அறிவியல் மிக மிக இன்றியமையாதது. அது பல துறைகளாகப் பரந்து உள்ளது. அவற்றுள் வானொலியும் ஒன்று , இது வியத்தகு ஆற்றல் படைத்தது. மிகப் பரந்து கிடக்கும் இவ்வுலகின் கண் நடைபெறும் நிகழ்ச்சிகளை இருந்த இடத்திலிருந்தே அவ்வப்போது கேட்டு மகிழவும், அறிவு பெறவும், பல நாடுகளுடன் உறவு கொள்ளவும் உறுதுணை செய்வது வானொலி.

இங்ஙனம் அளப்பரும் பயன்களை நல்கும் இவ் அரிய, அறிவியல் பற்றிய செய்திகளை இந் நூலின் கண் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கின்றார் இந் நூலாசிரியர். வானொலியின் தோற்றம், இயங்குமுறை, இயக்கும் கருவிகள் முதலியன பற்றியும் இளைஞர்கள் படித்து அறிந்துகொள்ளும் வகையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ள இதனாசிரியர், திரு. ந. சுப்பு ரெட்டியாராவர்கட்கு எம் நன்றி உரித்தாகுக.

இதனைப் பள்ளி மாணாக்கர்கள் வாங்கிக் கற்றுப் பயன் பெறுவார்களாக. அதற்குப் பெற்றோர்கள் உறுதுணை புரிவார்களாக.

சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/5&oldid=1394159" இலிருந்து மீள்விக்கப்பட்டது