2. நற்பேறான தற்செயல்
இந்த வியத்தகு தற்செயல் கி. பி. 1813 இல் டென்மார்க் நாட்டில் நிகழ்ந்தது. ஒருநாள் கோபன் ஹேகன் நகரில் பேராசிரியர் ஹேன்ஸ் கிறிஸ்டியன் ஓயர்ஸ்டெட்- (Hans Christian Oerstead) என்பார் ஒருவகுப்பில் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு முன்பாகவுள்ள மேசையின்மீது திசைகாட்டி (compass) ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதிலுள்ள காந்த முள் வடதிசையைக் காட்டுவதற்குப் பதிலாகக் கிழக்குத் திசையைக் காட்டிக் கொண்டிருந்தது. இதை அவர் காண நேர்ந்தது. உடனே வியப்புக் கடலில் ஆழ்ந்தார். அதன் பிறகு அவர் தம்முடைய அன்றைய பாடத்திற்காக மின்கலத்துடன் (battery) பொருத்தப்பெற்றுள்ள கம்பிகளின் மீது திசைகாட்டி வைக்கப்பெற்றிருப்பதைக் கவனித்தார்.
அந்தப் பேராசிரியர் இவ்வாறு யோசிக்கலானர்: “திசை காட்டியின் முள் தன்னுடைய நிலையிலிருந்து மாறுவதற்குக் கம்பிகளிலுள்ள மின்னோட்டம் காரணமாக இருக்கவேண்டும். அந்த மின்னோட்டம் அதனை யாதோ ஒரு முறையில் பாதிக்க வேண்டும்”. மேலும், அவர் திசை காட்டியின் முள் ஒரு சிறு காந்தமாக இருப்ப