இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. வியத்தகு மின்காந்தம்
மின்னோட்டத்தினல் கம்பிகளின்மூலம் ஒலி அனுப்பப் பெறுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆனால், இரண்டு காந்தங்களின் துணையின்றி எப்பொழுதுமே ஒலியினைக் கம்பிகளின் வழியாக அனுப்புதல் முடியாது. இது நமக்குச் சற்று வியப்பாகவே இருக்கும். ஏன் அனுப்ப முடியாது என்பதைச் சிறிது நேரத்தில் கீழ்க்கண்டவற்றால் அறிந்துகொள்வீர்கள்.
மேற்குறிப்பிட்ட காங்தங்களில் ஒன்று ஆணிகளையும் ஊசிகளையும் கவரும் தன்மையுடையது. இது தன்னுடைய காந்தத்தன்மையை ஒரு பொழுதும் இழப்பதில்லை. மற்றொரு காந்தம் இதனினின்
படம் 18. மின்காந்தத்தின் அமைப்பினை விளக்குகின்றது.
றும் சிறிது மாறுபட்டது. இது படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு தேனிரும்புத் துண்டின்மீது பல கம்பிச் சுருள்களைக் கொண்ட அமைப்பாகும். கம்